செய்திகள் :

``TVK MLA அருள் விக்னேஷ் பாவம்... வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல" - மாணிக்கம் தாகூர்

post image

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

அவரின் பதில், ``காவல்துறையைப் பொறுத்தமட்டிலும், நீண்டகாலமாக அது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்திருக்கிறது. இந்த நிலையிலிருந்து காவல்துறை முற்றிலும் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் இந்தத் தீபாவளி அன்று மட்டும்தான் கொலைகள் நடந்திருக்கின்றன என்பது போல கட்டமைக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று 10 கொலைகள் நடந்திருக்கின்றன.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

கடந்த ஆண்டு 6 கொலைகள், இந்த ஆண்டு 8 கொலைகள் நடந்திருக்கின்றன. இத்தகைய புள்ளிவிவரங்கள் காவல்துறையின் பொறுப்பும், கடமையும் பலமடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பும் கடுமையான நடவடிக்கை முறைகளும் மிக அவசியம் என்பதை இந்நிலைமை உணர்த்துகிறது. நயினார் நாகேந்திரன் 'தீபாவளியில் 15 கொலைகள் நடந்துவிட்டதால் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று அவர் கூறுவது விசித்திரமாக இருக்கிறது.

இந்த அளவுகோலின்படி பார்த்தால், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்காக யோகி ஆதித்யநாத்தும், தேவேந்திர பட்னாவிஸும் எப்போதோ ராஜினாமா செய்திருக்க வேண்டும். நயினார் நாகேந்திரனுக்கு முரசொலி நாளிதழில் பெரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதன் பின்னணியில் அவர்களின் உறவு இருக்கிறதுபோல.

நாங்கள் ஒரு கூட்டணி உறவில் இருக்கும்போது, அந்த உறவுக்கு எப்போதும் உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுக்கிறோம். ஏதேனும் தவறுகள் அல்லது சுட்டிக்காட்ட வேண்டிய விஷயங்கள் இருந்தால், அதை முதன்முதலில் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே தெரிவிக்கிறோம். அதுவே எங்களின் அணுகுமுறையாகவும் இருக்கிறது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பேட்டியைப் பார்த்தேன். நாம் எந்த அளவுக்கு வாட்ஸ்அப் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. வாட்ஸ்அப்பில் யாராவது ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டால், உடனே அதற்கு எதிர்வினையாற்றி, சம்பந்தப்பட்டவரை குற்றவாளியாக்கி ஊடக விசாரணையைத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்தச் சட்டமன்ற உறுப்பினர் பாவம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல் தலைமுறை எம்.எல்.ஏ. எளிய பின்னணியைக் கொண்டவர். பெரிய அரசியல் அனுபவம் இல்லாத எளிய குடும்பத்து மனிதர்களுக்கு த.வெ.க வாய்ப்பளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறது.

இத்தகைய சூழலில், உண்மைத்தன்மை அறியாமல் வாட்ஸ்அப் தகவல்களை வைத்து மட்டுமே ஒருவருக்கு எதிராக ஊடக விசாரணை நடத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்? அதற்கு அவரும் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பாருங்கள், தொலைபேசி அழைப்புகளைச் சோதியுங்கள், நான் அப்படி எதுவுமே செய்யவில்லை’ என்று அவர் அழுத்தம் திருத்தமாக விளக்கம் அளித்த பிறகும், மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே கேள்வி எழுப்புவதும் விவாதிப்பதும் சரியல்ல. ஒருவேளை அதில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பது வேறு விஷயம்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

ஆனால், ஒரு தவறே நடக்காதபோது, வெறும் வாட்ஸ்அப் வதந்தியை உண்மை என நம்பி, எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அதற்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் 2,000 பேருக்கு முன்னால் பெண்களுக்கு எதிராகப் பேசியது அயோக்கியத்தனம். அருவருப்பான, அதிகார மமதை நிறைந்த பேச்சு பொதுவெளியில் சான்றுகளுடன் உள்ளது.

ஆனால், எந்தவிதமான ஆதாரமுமே இல்லாத ஒரு வாட்ஸ்அப் வதந்தியை வைத்துக்கொண்டு, அதையும் உதயநிதியின் பேச்சையும் ஒப்பிட்டுப் பேசுவது தவறான போக்குக்கு. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிகாரி தரப்பிலோ அல்லது வேறு தரப்பிலோ அதிகாரப்பூர்வமாகப் புகார்கள் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், அவர் தவறு செய்துவிட்டது போன்றே ஊடகங்கள் சித்தரிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. துணை சபாநாயகர் விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம்!' - அமைச்சர் ஷாஜகான் பேட்டி

த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் தொடர்து நடப்பதற்கு மது மற்றும் போதை பழக்கமே முக்கிய காரணியாக உள்ளது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்... மேலும் பார்க்க

"கூட்டணியில் இருந்துக்கொண்டே தவெக அரசை விமர்சிக்கிறார்கள்!" - வைகோ குற்றச்சாட்டு; பெ.சண்முகம் பதிலடி

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அந்தக் கட்சிக்கு 108 இடங்களை மட்டுமே வழங்கியிர... மேலும் பார்க்க

"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" - ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோக... மேலும் பார்க்க

'நம்பிக்கையில்லா தீர்மானம்! - முன்னெச்சரிக்கையாக ரெசார்ட்டில் எம்.எல்.ஏக்களை திரட்டும் CM விஜய்?

சென்னை தனியார் விடுதியில் இன்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார் முதல்வர் விஜய். நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்... மேலும் பார்க்க

அஜித் தோவல் மீது குற்றச்சாட்டு! அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன் - இந்தியா என்ன சொல்கிறது?

கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய நீதிமன்றச் சம்மன் தற்போது இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பண்ணூன் தொடர்ந... மேலும் பார்க்க

'அட்டாக் பரந்தாமன்' லைப்ரரி மேட்டரை விட்றாதீங்க! - தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு புது அசைன்மெண்ட்!

சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' அலுவலகத்தில் தவெகவின் செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க