செய்திகள் :

US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்... அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா?

post image

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சபாநாயகராக அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதவியை அவர் வகிக்கும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றின் முதல் கறுப்பின சபாநாயகர் என்ற நிலையை எட்டுவார்.

பெரும்பான்மையும் சபாநாயகர் வாய்ப்பும்

நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியதே இந்த எதிர்பார்ப்புக்கு அடிப்படை. அங்கு பெரும்பான்மை பெறும் கட்சி தனது சபாநாயகர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருக்கும் ஜெஃப்ரிஸ், இயல்பாகவே இப்பதவிக்கான முதன்மைத் தேர்வாக உள்ளார்.

hakeem jeffries

சபாநாயகர் வேட்புமனுவுக்குக் கட்சியினரின் ஆதரவைக் கோரி, நவம்பர் 4-ம் தேதி அவர் கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமைத் தேர்தலில் அவர் வேட்பாளராகத் தேர்வானாலும், ஜனவரி மாதம் நடைபெறும் பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பில் 218 வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அப்போதுதான் அவர் அதிகாரபூர்வமாகச் சபாநாயகராக முடியும்.

சட்டத்துறையிலிருந்து நாடாளுமன்றம் வரை

1970-ல் நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்த ஹக்கீம் ஜெஃப்ரிஸ், பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையும் பயின்றவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

hakeem jeffries

2007-ல் நியூயார்க் மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். காவல்துறையின் 'ஸ்டாப் அண்ட் ஃபிரிஸ்க்' (Stop and Frisk) நடவடிக்கையில், குற்றம் சாட்டப்படாதவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்வதற்கு எதிராகச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். தொடர்ந்து 2013-ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி

அமெரிக்கக் காங்கிரஸில் குற்றவியல் நீதி சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட 'FIRST STEP Act' சட்டத்தின் முக்கிய ஆதரவாளராகச் செயல்பட்டார். 2019-ல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், 2023 ஜனவரியில் நாடாளுமன்றத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அமெரிக்கக் கட்சியொன்றின் நாடாளுமன்றத் தலைவரான முதல் கறுப்பினத்தவர் இவர்தான்.

தற்போது அந்தப் பயணம் சபாநாயகர் பதவியை நோக்கி நகர்ந்துள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் அது முக்கிய மாற்றமாக அமையும்.

திமுக அலுவலகத்துக்கு அடிக்கல், பெரியார் அறிவுலகத்திற்காக பாராட்டு விழா - கோவையில் ஸ்டாலின் |Album

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலகத்திற்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

கேரளாவில் பிறந்தவர்.. இன்று லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர்! - அமெரிக்க அரசியலில் முத்திரை பதித்த நித்யா ராமன்

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் . தற்போதைய மேயர் கரேன் பாஸை தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றிருப்... மேலும் பார்க்க

'ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷன்; தயாராகும் எதிர்க்கட்சிகள்(?) அலர்ட் மோடில் முதல்வர் விஜய்?

சட்டமன்றத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டி 6 மாதம் முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் அரசியல் வட்டாரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷனை பற்றி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: நந்தி வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி; ஊழியர் சஸ்பெண்ட்; தீயணைப்புத் துறையினரும் வருத்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருக்கோயிலின் கோபுரங்களைச் சுத்தம் செய்து தருமாறு கோ... மேலும் பார்க்க

`லயோலா மணி புகார் கொடுத்திருக்கணும்; அமைச்சருக்கே விழிப்புணர்வு இல்லையா?'- வழக்கறிஞர் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா (01.11.2026) அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வன்னி அரசு, சி. விஜயலட்சுமி, சட்டமன்ற ... மேலும் பார்க்க

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த... மேலும் பார்க்க