செய்திகள் :

'தனது ஆசையை விஜய் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் ஏற்பட்ட கோபமா?'- ரவிசங்கருக்கு டிடிவி கேள்வி

post image

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ரவிசங்கர்
ரவிசங்கர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான திரு.ரவிசங்கர் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.

விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை திரு.ரவி சங்கர் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை திரு.விஜய் அவர்கள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?

எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் திரு.ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தமிழகத்தில் நேற்று 11 கொலைகள்: " அகந்தையில் வாழும் முதலமைச்சர் வாய் திறக்கப் போவதில்லை" - கனிமொழி

நேற்று (நவம்பர் 8) தீபாவளி அன்று தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளன.இந்தச் சட்ட ஒழுங்கு பிரச்னையைச் சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.கனிமொழி தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

ஈரான் போரின் அடுத்த கட்டம்: ட்ரம்பிற்கு '2 நாள் திட்டத்தை' பரிந்துரைக்கும் ஈரான் - அது என்ன?

அமெரிக்க மக்கள் ஈரான் போரில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாகவே, நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.இதனால், ‘நவம்பர் 3-ம் தேதிக்குப் பின்’ என்ற... மேலும் பார்க்க

ஒரே நாளில் 9 கொலைகள்: 'எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?'- உதயநிதி கண்டனம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 9 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்... மேலும் பார்க்க

"அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி பட்டாசு விற்பனை - மாபெரும் இலக்கு" - அமைச்சர் கீர்த்தனா

இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்... அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளான நேற்று (நவ. 8) மட்டும் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில... மேலும் பார்க்க

"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" - செனட்டர் அப்துல் எல்-சையத்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.இது குறித்து ... மேலும் பார்க்க