செய்திகள் :

அண்ணா நூலகத்தில் லஞ்சு ஒழிப்புத் துறை சோதனை!

post image

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்

அதாவது பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான் அகல்விளக்கு பதிப்பகத்தைக் கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும்போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது.

நூல்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருக்கின்றனர். நூல் கொள்முதல் ஊழல் தொடர்பாக விசாரிக்கவும் அது தொடர்பான கோப்புகளை சேகரிக்கவும் இந்த சோதனை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் மரணம் - காப்பகத்தின் அலட்சியத்தால் விபரீதம்?

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் ஆணாய்பிறந்தான் கிராமம் உள்ளது. இங்கு, தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் அங்கீகாரம்பெற்ற `டெர்ரே டெஸ் ஹோம்ஸ் ( TDH CORE ) கோர் ட... மேலும் பார்க்க

'கொன்னுடுவேன்னு மிரட்டி வீடியோ எடுத்தாங்க' - துணை சபாநாயகர் தாக்கியது குறித்து கார்த்திக்

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக்குமார் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இரு... மேலும் பார்க்க

"மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை" - அன்புமணி ராமதாஸ் காட்டம்

"கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதற்கான நீதிமன்ற ஆணைகள் தெளிவாக இருக்கும் நிலையில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது..." என்று ... மேலும் பார்க்க

"தீபாவளியன்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக கொலை சத்தம் கேட்டிருக்கிறது"- தவெகவுக்கு எடப்பாடி கண்டனம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 11 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும... மேலும் பார்க்க

'சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?'- ரவிசங்கருக்கு எடப்பாடி கண்டனம்

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.... மேலும் பார்க்க

தேனியில் SI கொலை: "குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி" - முதல்வர் விஜய் அறிவிப்பு

நேற்று (நவம்பர் 8) தேனி மாவட்டத்தில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இது குறித்து தமிழ்நா... மேலும் பார்க்க