செய்திகள் :

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப் விஜய் ஓர் அற்புதத்தை நடத்திக் காட்டியுள்ளார்.

108 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய்தான் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்தனர். ஆட்சி அமைத்து நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே இடைத்தேர்தல் நடைபெற்றது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

அதிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை முதல்வர் ஜோசப் விஜய் பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் இனி ஒரே கழகம்தான் அது தமிழக வெற்றிக் கழகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழாகப் பார்க்க வேண்டும்.

தி.மு.க அ.தி.மு.க அரசியல் பேசாமல் முதல்வர் விஜய்யைப் பற்றி  மட்டும் விமர்சனம் செய்தார்கள். அந்த விமர்சனங்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க நிலைமையைப் பற்றி யோசித்தால் வேதனைக்குரிய விஷயம்தான். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க இருந்தபோது தோல்வியைக் காணாத இயக்கமாக இருந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவை இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாக உயர்த்தினார். கடந்த 2021-ல் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தது. 2026-ல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தற்போது அந்தக் கட்சி இன்று மழுங்கி, மங்கி விட்டது. ’திருமங்கலம் ஃபார்முலா’ என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டியது தி.மு.க. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் நடைபெற்ற தேர்தல்களில் அரசியல் கட்சியினர் மக்களை எப்படிச் சந்தித்தனர் என்பது தெரியும். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் பணம் கொடுத்து வாக்குகளைத் திருடாமல், வாங்காமல் நேர்மையாக தேர்தலைச் சந்தித்தனர்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

இது ஒன்றே தூய சக்தி என்பதற்கு ஒரு அடையாளம். இடைத்தேர்தல் என்றால் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இடைத்தேர்தல் வந்துவிட்டால் தீபாவளி, பொங்கல் என்று மக்கள் எதிர்கொள்வார்கள். ஆனால் இந்த இடைத்தேர்தலில் ஒருபைசா கூட கொடுக்காமல் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலைச் சந்தித்தது.

பொருளாதார வீக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் விலைவாசி உயரும். பொருளாதார நிலை சரியாகும் போது விலைவாசி குறையும். விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். நிச்சயமாக விலைவாசி உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.

விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக, லட்சக்கணக்கான பழமையான மரங்கள் நாள்தோறும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அவற்றில் 80% மரங்கள் நூறு ஆண்ட... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன... மேலும் பார்க்க

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஹவுதியின் ... மேலும் பார்க்க

'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

'மாணவர்களின் குரல்' என்ற பெயரில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தியிருந்தார். காங்கிரஸின் தேசியத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த சில... மேலும் பார்க்க