செய்திகள் :

"அந்த தொடர்பைப் பாதுகாப்பதே எங்களின் பொறுப்பு!" - சைக்கிள் ப்யூர் அகர்பத்தி அர்ஜுன் ரங்கா

post image

77 ஆண்டுகால நறுமணச் சிறப்பைக் கொண்டாடும் வகையில், உலகின் மிகப்பெரிய அகர்பத்தி தயாரிப்பு நிறுவனமான சைக்கிள் பியூர் அகர்பத்தி, சென்னையில் தனது புதிய பண்டிகைக் காலத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவின் ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதிலும், நுகர்வோரின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் சைக்கிள் பியூர் அகர்பத்தி தொடர்ந்து பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகிறது.

Cycle Pure Agarbathi - Arjun Ranga
Cycle Pure Agarbathi - Arjun Ranga

ஆண்டுக்கு 1,200 கோடி ஊதுபத்திகளுக்கு மேல் உற்பத்தி செய்யும் சைக்கிள் பியூர் அகர்பத்தி, இன்று உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இல்லங்களுக்கு நம்பிக்கையின் நறுமணத்தைக் கொண்டு செல்வதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 கோடிக்கும் மேலான பிரார்த்தனைகளுக்குத் துணையாக நிற்கிறது.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, இந்நிறுவனம் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணந்த பகுதியாக இருந்து வருகிறது. மேலும், பாரம்பரியக் கைவினைத்திறனை நவீன கண்டுபிடிப்புகளுடன் இணைத்துப் புதிய நறுமண அனுபவங்களை உருவாக்கி வருகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் சைக்கிள் ஸ்டெம் சாம்பிராணி, நவீன் பூஜை நெய், குட் லக் பிரீமியம் அகர்பத்தி (லாவெண்டர், சந்தனம், கஸ்தூரி) மற்றும் சைக்கிள் பியூர் கோல்ட் பிரஸ்டு எடிபிள் நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டிய உண்ணக்கூடிய நல்லெண்ணெய்) ஆகியவை அடங்கும்.

அன்றாட வழிபாடுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தயாரிப்புகள், இந்தியாவின் காலத்தால் அழியாத மரபுகளில் வேரூன்றிய அதே வேளையில், தரம், நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன.

Cycle Pure Agarbathi - Arjun Ranga
Cycle Pure Agarbathi - Arjun Ranga

இந்த அறிமுக விழாவில் பேசிய என்.ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அர்ஜுன் ரங்கா கூறுகையில், "77 ஆண்டுகளாக, எங்களின் பயணம் ஒரு எளிய தத்துவத்தால் வழிநடத்தப்படுகிறது - பாரம்பரியத்தை மதிப்பது, அதே வேளையில் நுகர்வோரின் மாறும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து எங்களை மேம்படுத்திக் கொள்வது.

இந்திய இல்லங்களில் நறுமணத்திற்கு எப்போதுமே ஒரு தனி இடமுண்டு. அந்த உணர்வுபூர்வமான தொடர்பைப் பாதுகாப்பதும், இன்றைய நுகர்வோருக்குப் பொருத்தமான தயாரிப்புகளை உருவாக்குவதும் எங்களது பொறுப்பாகும்.

நாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொன்றும் தரம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அன்றாட வழிபாடுகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களின் நம்பகமான அங்கமாக இருப்பதை உறுதி செய்கிறது," என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் ஆவணப் பதிவில் புதிய மைல்கல்: 'வருகை இல்லா சொத்துப் பதிவு'- சேவையைத் தொடங்கிய DRA நிறுவனம்!

டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டி.ஆர்.ஏ (DRA)... மேலும் பார்க்க

லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிட்டடின் IPO வெளியீடு - முழு விவரம்!

லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிட்டடின் ஆரம்ப பொதுப்பங்கு வெளியீடு (IPO) 2026 ஆகஸ்ட் 17 அன்று தொடங்குகிறது; தலா ₹5 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கான விலை வரம்பு ₹190 முதல் ₹201 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தலா ... மேலும் பார்க்க

`Platinum Season Of Love 2026 விருது'- பிளாட்டினத்தில் தன் பாரம்பரியத்தை தொடரும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் வழங்கும் அங்கீகாரத்தை; தொடர்ச்சியாக 10-வது ஆண்டாகப் பெற்றுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், ‘டாப் கன்ட்ரிபியூட்டர் – செயின்’ விருதுடன், மேலும் மூன்று சிறப்பு - ஷோரூம் விருதுகளையு... மேலும் பார்க்க

GRT: கருணை மற்றும் சமூகச் சேவையின் மூலம் தங்கத்தையும் மிஞ்சும் வகையில் ஜொலிக்கும் ஒரு பாரம்பரியம்!

சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. க்ராண்ட் ஹோட்டலில், ஆண்டுதோறும் நடைபெறும் CSR நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக - இந்த ஆண்டும் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிறுவனங்... மேலும் பார்க்க