செய்திகள் :

"அன்புமணி வஞ்சகத்தோடு நடுநிலைமை வகித்தது அதிமுக-விற்குப் பெரிய இழப்பு" - டாக்டர் கிருஷ்ணசாமி

post image

"இடைத்தேர்தலில் தவெக சாதித்துவிடவும் இல்லை, திமுக, அதிமுக சாய்ந்து போய்விடவும் இல்லை" என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கான சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்தால் ஆதாயமான பதவிகள் கிடைக்கும் என்று இதுவரை 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவினர். இது அப்பட்டமான ’குதிரை பேரம்’ என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.

ஆளுநர் வரையிலும் சென்று, இதுபோல ஆதாயத்திற்காக கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தலே நடத்தக் கூடாது என்று நாம் கோரிக்கை வைத்தோம்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளுமே பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்.

கடந்த நான்கு மாத ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சாதனைகள் எதையும் ஆளும்கட்சி செய்யாத நிலையில், நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்ற கருத்தை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

டாக்டர் கிருஷ்ணசாமி

அதற்கு ஏற்ப, அணி மாறிய இரண்டு வேட்பாளர்களும் தொகுதிக்குள் சென்ற இடமெல்லாம் பொதுமக்களின் எதிர்ப்புகளைச் சந்தித்தனர். கள நிலவரங்கள் நாளுக்கு நாள் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சென்றுகொண்டிருந்ததை அறிந்துகொண்ட விஜய், மதுராந்தகத்தில் 39 இடங்களில் பேரணி நடத்தினார், தாராபுரத்தில் மிக குறைவாக வாக்குகள் பெறக்கூடும் என்ற மூலனூர் ஒன்றியத்தில் மாட்டு வண்டியை ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார்.

அங்கிருக்கக்கூடிய பெரும்பான்மை சமுதாயத்தின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று விழுந்து விழுந்து கும்பிட்டார். பொதுவாக இடைத்தேர்தல்களுக்கு முதலமைச்சராக இருக்கக்கூடியவர்கள் இப்படியெல்லாம் மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்த வரலாறு இதுவரை இல்லை.

ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைக் கொண்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டார்கள். எனினும், தாராபுரத்தில் ஆறு சுற்றுகளில் அதிமுகவே முன்னிலை வகித்தது. அதிமுக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இரண்டாவது இடத்திற்கு வந்த திமுகவிற்கும், வெற்றி பெற்ற தவெகவிற்கும் இடையே வாக்கு வித்தியாசம் வெறும் 9,471 மட்டுமே. அதேபோல மதுராந்தகத்திலும் பெரிய வித்தியாசம் இல்லை. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே கடந்த கால வரலாறு.

இடைத்தேர்தல்

எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தலில் சந்தித்த தோல்வி மனப்பான்மையிலிருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராதது, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கள அளவில் ஒன்றுபடாமல் இருந்தது, உண்மையான நேச சக்திகளை இணைத்துக்கொண்டு செயல்படாதது ஆகியவை ஆளுங்கட்சிக்கு நூலிழையில் சாதகமாக அமைந்துவிட்டது என்றாலும் தவெக இடைத்தேர்தலில் சாதித்துவிட்டது என்று சொல்வதற்கு எதுவுமில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஐயுஎம்எல், மதிமுக, விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட சிறு சிறு அமைப்புகளோடு களம் கண்டது திமுக. இந்தத் தேர்தலில், அவர்கள் யாரும் கூட்டணியில் இல்லை. கடந்த இரண்டு தேர்தல்களில் வாய்ச்சவடாலுடன் மாயாஜாலம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் ’பச்சோந்திகளாக’ மாறி எதிர்த்தரப்பிற்குச் சென்ற பின்னரும் தனது வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்ட திமுக சாய்ந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

இதன்மூலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சட்டமன்றப் பொதுத் தேர்தலிலேயே திட்டமிட்டு மடைமாற்றப்பட்டு விட்டன என்பது உறுதியாகி உள்ளது. யார் யாரால் பலன் பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

பொதுத் தேர்தலில் முதலிடத்திலிருந்த அதிமுக இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்குப் பின்பு அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட பிளவுகள், பலர் அணி மாறியது, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வாரச்சந்தையில் கூடுவதுபோல பனையூரில் முன் கேட் வழியாகவும் பின் கேட் வழியாகவும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டது, மேல்மட்டத்தில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகள், கள அளவில் பணியாற்ற போதிய தொண்டர்கள் இல்லாதது ஆகியவை அதனுடைய வாக்கு வங்கியைக் குறைத்ததோடு, மூன்றாவது இடத்திற்கும் தள்ளிவிட்டது.

2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணியில் அல்வாவைப் போல ஒரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும், 17 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்ற அன்புமணி வஞ்சகத்தோடு நடுநிலைமை வகித்தது அதிமுகவிற்குப் பெரும் இழப்பாகும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டிலும் தமிழக அரசியல் களத்தில் பச்சோந்திகளையும், சந்தர்ப்பவாதிகளையும் பொதுவெளியில் நன்கே அடையாளம் காட்டியிருக்கிறது. விஜயின் பலவீனத்தை வெளிப்படுத்தி, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதற்குண்டான எச்சரிக்கையையும், எதிர்காலத்திற்கான சரியான அரசியல் களத்தையும் அமைத்து கொடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா ... மேலும் பார்க்க

சேலம் : மதுராந்தகம் தாராபுரம் வெற்றியை பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடிய தவெக வினர்

சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இ... மேலும் பார்க்க

``இந்தியப் பிரதமர் அம்பானி அவர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்" - சீண்டும் எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்த... மேலும் பார்க்க

Navi Pillay: நோபல் அங்கீகாரத்துக்குப் பின்னால், இனவெறியை எதிர்த்த நவநீதம் பிள்ளையின் போராட்ட வரலாறு!

இனத்தின் அடிப்படையில் மனிதர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில், நீதிமன்றத்தைத் தனது போராட்டக் களமாக மாற்றியவர் நவநீதம் பிள்ளை. தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகத் தொடங்கிய அவரது பயணம், சர்வ... மேலும் பார்க்க

நெல் உலர்த்தும் நவீன இயந்திரங்கள் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை நேரங்களில் ஏற்படும் பருவம் தவறிய திடீர் மழையினால், விவசாயிகள் கடும் துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைப் பாத... மேலும் பார்க்க

கூட்டணி பலமின்றி களமிறங்கிய திமுக; வாக்கு சதவிகிதம் ஓர் ஒப்பீடு; 3 ப்ளஸ்கள் என்னென்ன?

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா என இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகமே வாகைச் சூடியிருக்கிறது.இன்னொரு பக்கம், இந்த இரண்டு தொகுதிகளிலும் ... மேலும் பார்க்க