செய்திகள் :

Doctor Vikatan: இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக்கொண்டிருப்பவர்கள், உடற்பயிற்சிகள் செய்யலாமா?

post image

Doctor Vikatan: எனக்கு 48 வயதாகிறது. எனக்கு இதயத்தில் ஆஞ்சியோ மூலம் ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள். நான் உடற்பயிற்சி செய்யலாமா... அதாவது ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யலாமா... குழப்பம் தீர்க்கவும்.

-Gnanavel, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் அனந்தராமன்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் அனந்தராமன்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் அனந்தராமன்

மாரடைப்பு (Heart Attack) ஏற்படும்போதோ அல்லது ரத்தநாள அடைப்பினால் வலி ஏற்படும்போதோ ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்படுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது, அந்த நபர் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பிறகு எல்லாம் நலம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. வாழ்க்கைமுறையில் முக்கியமாக சில மாற்றங்களைப் பின்பற்றியே தீர வேண்டும். 
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். தினமும் 6 முதல் 7 மணி நேர தொந்தரவில்லாத உறக்கம் கண்டிப்பாகத் தேவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

சிகிச்சை கையிலோ அல்லது காலிலோ மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்தப் பகுதியில் காயம் ஆறும் வரை தீவிர உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ ஆலோசனையோடு ஆரம்பத்தில்  5 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே  மிதமான உடற்பயிற்சிகள் செய்யலாம். 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு உடற்பயிற்சியின் நேரத்தை மெதுவாக அதிகரிக்கலாம். முதலில் 10 முதல் 15 நிமிடங்கள் செய்து, படிப்படியாக 4 முதல் 5 வாரங்களில் 30 முதல் 35 நிமிடங்கள் வரை உயர்த்தலாம்.

AI image

உடற்பயிற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் முதல் 5 முதல் 10 நிமிடங்கள் பொறுமையாக உடலைத் தயார்படுத்தும் வார்ம்-அப் (Warm-up) பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்து 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம். கடைசி 5 முதல் 10 நிமிடங்கள் பொறுமையாக மற்ற உடற்பயிற்சிகளைச் செய்து உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

வாரத்திற்கு 4 முதல் 5 முறை  உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தசைகளை வலுவூட்டும் (Muscle Strengthening)  பயிற்சிகளை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யலாம். ஆனால், அதிக எடையுள்ள பளு தூக்கும் பயிற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கார்டியாக் ரிஹாபிலிட்டேஷன் (Cardiac Rehabilitation) என்பது மாரடைப்பு (Heart Attack), இதய அறுவை சிகிச்சை (Bypass / Angioplasty) அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக மீண்டு வரவும், அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வழங்கப்படும் ஒரு மருத்துவ மறுவாழ்வு திட்டமாகும்.

இதில் மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்  

4 முதல் 6 வாரங்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இவற்றைப் பின்பற்றிய பிறகு, வீட்டிலேயே சுயமாக உடற்பயிற்சி செய்வதே சரியான முறை. உடற்பயிற்சியின் போது திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மயக்கம் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.


டாக்டர் அனந்தராமன்:

சென்னை, காவேரி மருத்துவமனையில் சீனியர் இதயநோய் சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 22 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடித்தால் உடல் வலிமை பெறுமா?

Doctor Vikatan:உடலுக்குப் பலம் கிடைக்க, அதிகாலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் பச்சை முட்டையைக் கலந்து குடிக்கலாம் என்று சிலர் பரிந்துரைக்கிறார்கள். இது உண்மையிலேயே நல்லதுதானா அல்லது பாதுகாப்பானதுதா... மேலும் பார்க்க

Doctor Vikatan: தொப்புளுக்கு மேலே கொழுப்புக்கட்டி... அப்படியே விடலாமா, அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 48. எனக்குத் தொப்புளுக்கு மேலே ஒரு ஜான் அளவுக்கு கொழுப்புக்கட்டி இருக்கிறது. அதை அப்படியே விடலாமா அல்லது அகற்ற வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும்,... மேலும் பார்க்க

10 மாதங்களில் 45 கிலோ கட் : `என்னவெல்லாம் சாப்பிட்டேன் தெரியுமா?' - வைரலாகும் பெண்ணின் Diet Plan

உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு உணவுமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், Saakshi Singh என்ற Content Creator தனது எடை குறைப்பு பயணம் குறித்துப் பகிர்ந்த தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.... மேலும் பார்க்க

Apollo : தோல் வழியாக 50 ஃபோன்டன் சிகிச்சைகள்: சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை புதிய மைல்கல்

சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, அறுவைசிகிச்சைக்கு முன்னதாக தயாரிப்பு ஏற்பாடுகள் எதுவுமின்றி 50 பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சை செயல்முறைகளை நிகழ்த்தி உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதை பெரும... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பயன்படுததிய மருந்து... சருமத்தில் அலர்ஜி... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan:என் ஆண் நண்பருக்கு 30 வயதாகிறது. ஜலதோஷத்திற்குமெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிப் பயன்படுத்திய போது உதடு, ஆணுறுப்பு, கை விரல் இடுக்கு, உள்வாய் மேல் அண்ணம் போன்ற பகுதிகளில் வீக்கமும் அர... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோதுமைப்புல் சாறு குடித்தால் கேன்சர் வராது என்பது உண்மையா?

Doctor Vikatan:தினமும் கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் கேன்சர் வராது என்று சொல்கிறார்களே, அது உண்மையா? எவ்வளவு குடிக்க வேண்டும்..?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்கும... மேலும் பார்க்க