செய்திகள் :

``இந்தியப் பிரதமர் அம்பானி அவர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்" - சீண்டும் எலான் மஸ்க்

post image

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கும் எலான் மஸ்க், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கு இன்னும் ஏன் அனுமதி இல்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்தியாவில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் பெருநிறுவனங்களின் தலையீடு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்த மஸ்க், முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்கின் குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை,``இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான விதிமுறைகளோ, அவற்றை நடைமுறைப்படுத்தும் முறையோ எந்த நிறுவனத்துக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இல்லை" என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில், ``மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களுக்கு, இந்தியாவின் உண்மையான அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்டேன். அதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவின் மகத்தான மக்களை உங்கள் ஏகபோக உரிமையால் பயன்படுத்திக்கொள்வதையே நீங்கள் விரும்புவீர்கள் என்பது இயல்புதான். இருப்பினும், ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் இந்தியாவில் தொழில்போட்டியில் இறங்க நீங்கள் அனுமதிப்பீர்களா? மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இணைய வசதியே இல்லாத பல பகுதிகள் இன்னும் இருக்கின்றன.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இதனால் அங்குள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளும், சிறு தொழிலதிபர்கள் தங்கள் பொருட்களை உலகச் சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. ஸ்டார்லிங்க் சேவை அவர்களுக்குக் கிடைத்தால், அது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையை நேர்மறையான திசையில் மாற்றி அமைக்கும். நன்றி!" எனப் பதிவிட்டிருக்கிறார். அவரின் பதிவு சமூக ஊடகங்களில் விவாதமாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா ... மேலும் பார்க்க

சேலம் : மதுராந்தகம் தாராபுரம் வெற்றியை பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடிய தவெக வினர்

சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இ... மேலும் பார்க்க

Navi Pillay: நோபல் அங்கீகாரத்துக்குப் பின்னால், இனவெறியை எதிர்த்த நவநீதம் பிள்ளையின் போராட்ட வரலாறு!

இனத்தின் அடிப்படையில் மனிதர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில், நீதிமன்றத்தைத் தனது போராட்டக் களமாக மாற்றியவர் நவநீதம் பிள்ளை. தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகத் தொடங்கிய அவரது பயணம், சர்வ... மேலும் பார்க்க

"அன்புமணி வஞ்சகத்தோடு நடுநிலைமை வகித்தது அதிமுக-விற்குப் பெரிய இழப்பு" - டாக்டர் கிருஷ்ணசாமி

"இடைத்தேர்தலில் தவெக சாதித்துவிடவும் இல்லை, திமுக, அதிமுக சாய்ந்து போய்விடவும் இல்லை" என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து வெளிய... மேலும் பார்க்க

நெல் உலர்த்தும் நவீன இயந்திரங்கள் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை நேரங்களில் ஏற்படும் பருவம் தவறிய திடீர் மழையினால், விவசாயிகள் கடும் துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைப் பாத... மேலும் பார்க்க

கூட்டணி பலமின்றி களமிறங்கிய திமுக; வாக்கு சதவிகிதம் ஓர் ஒப்பீடு; 3 ப்ளஸ்கள் என்னென்ன?

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா என இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகமே வாகைச் சூடியிருக்கிறது.இன்னொரு பக்கம், இந்த இரண்டு தொகுதிகளிலும் ... மேலும் பார்க்க