செய்திகள் :

``அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும்.!" - சவூதி அரேபியாவை சாடும் ஈரான்; காரணம் என்ன?

post image

சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை ஈரான் விமர்சித்திருக்கிறது.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் பங்கேற்ற உயர்மட்டச் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் கையெழுத்திட்டனர். அதன்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். பிராந்திய பாதுகாப்புச் சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், தற்காப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்
சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியா, அணுஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான், நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் இந்த கூட்டமைப்பு உலக அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து சவூதி அரசு தரப்பிலிருந்து, ``இது எந்தவொரு ராணுவ அச்சுக்கோப்போ அல்லது மதரீதியான கூட்டமைப்போ அல்ல. இது தங்களது சுயசார்புப் பாதுகாப்புத் திறனை வளர்ப்பதற்கான முயற்சியே தவிர, பிற சர்வதேச மற்றும் வளைகுடா நாடுகளுடனான உறவைப் பாதிக்காது" என்றும் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தம் குறித்து ஜெர்மன் மார்ஷல் ஃபண்ட் அமைப்பின் இயக்குனர் ஓஸ்குர் உன்ஸ்லுஹிசார்சிக்லி, ``இந்த ஒப்பந்தம் முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் எதிரானது அல்ல. பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை, உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆயுதமேந்திய அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சவூதி அரேபியாவிற்கு ஈரானாலும், துருக்கிக்கு இஸ்ரேலாலும் பாதுகாப்புச் சவால்கள் இருப்பதும் மறுப்பதற்கில்லை." என்றார்.

சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்
சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு உறுப்பினர் இப்ராஹிம் ரேசாய், ``துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான காகித அளவிலான ஒப்பந்தங்கள் சவுதி அரேபியாவிற்குப் பாதுகாப்பைத் தராது. அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும் சவூதிக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. எனவே பிறரிடம் பாதுகாப்பிற்காகப் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு, சவூதி அரேபியா தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான்: ``உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?" - இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்... மேலும் பார்க்க

``முதலமைச்சரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை" - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``காவிரி பிரச்னையில் தி.மு.க தொடர்ந்து தமிழகத்திற்குத் துரோகம் செய்து வருகிறது. 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் நட... மேலும் பார்க்க

'வனத்துறையினர் ஏதாவது செய்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன்' – தங்கதமிழ்செல்வன்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90- க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருவதோடு விவசாய தொழிலை செய்து வருகின்றனர். வருசநாடு உள்ளிட்ட 9 ... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில... மேலும் பார்க்க

’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலித்தால் காவல் துறை வழக்குப்பதிவு... மேலும் பார்க்க