செய்திகள் :

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம் : பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர்... இல்லறம் இனிக்கும்!

post image

திருவல்லிக்கேணி என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்தான். ஆனால் அத்தலத்தில் சிறப்பு மிக்க சிவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. வாருங்கள், அத்தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

இத்தலத்தில் இறைவனின் திருநாமம் - ஸ்ரீகாமகலா காமேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகாமகலா காமேஸ்வரி. பெயர்ப் பொருத்தம் குறித்துச் சிலாகித்துக் கூறியிருக்கிறார் காஞ்சி மகாபெரியவர்.

அசுரன் சூரபதுமனின் கொடுமைகளால் கடும் அவதிக்குள்ளானார்கள் தேவர்கள். அந்த அசுரனை அழிக்கும் வல்லமை சிவ மைந்தன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. அதற்கு, சிவ - பார்வதி இணைந்து, முருகப் பெருமானின் அவதாரம் நிகழவேண்டும்.

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம்

ஆனால் சிவனாரோ... சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் ஆகிய முனிவர்களுக்கு ஞான உபதேசம் அருளிய படி, கண்கள் மூடி மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இந்த நிலையில் இருந்து அவர் எழுந்தால்தானே தங்களுடைய விருப்பம் நிறைவேறும்; அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர்களுக்கு, மன்மதனின் நினைவு வந்தது. அவனை அணுகி, ஈசன் மீது காம பாணம் தொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

முதலில் தயங்கிய மன்மதன், ஒரு நல்ல காரியத்துக்காகத்தானே தேவர்கள் தன்னிடம் உதவி கோரி வந்துள்ளனர் என்கிற எண்ணத்தில், அதற்கு ஒப்புக்கொண்டான். சிவனார் இருக்கும் இடத்துக்கு வந்தவன், அவர் மீது மலரம்பு தொடுத்தான். கண் விழித்த சிவனார், மன்மதனின் செயல் கண்டு கோபம் கொண்டார். நெற்றிக்கண் திறந்து அவனை எரித்துச் சாம்பலாக்கினார். அதையறிந்த ரதிதேவி, தன் கணவனை மன்னித்து, உயிர்ப்பிக்குமாறு சிவ - பார்வதியிடம் கண்ணீர்மல்க வேண்டினாள். அவள் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான், ''இனி உன் கணவன், உனக்கு மட்டும் உருவம் உடையவனாகவும், மற்றவர்களுக்கு அனங்கனாகவும் (அங்கம் இல்லாதவன்) திகழ்வான்'' என அருளினார்.

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர்

இப்படி, காமனாகிய மன்மதனை அழித்துக் காலன் ஆனதால், சிவபெருமானுக்கு காமகாலன் எனும் பெயர் அமைந்தது. இதுவே பின்னாளில், ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் என்றானதாகச் சொல்வர்.

ராஜகோபுரத்தைத் தரிசித்தபடி, உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். வலப் பக்கத்தில் சுவாமி ஐயப்பனும் ஸ்ரீஆஞ்சநேயரும் அருள்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்திதேவரை தரிசித்து, உள்ளே கருவறையை நோக்கினால்... ஆதி அந்தம் இல்லாத பரஞ்ஜோதியாம் ஸ்ரீபரமேஸ்வரன், லிங்கத் திருமேனியராக - காமகலா காமேஸ்வரராக அருள் தரிசனம் தருகிறார். காசி க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கமாம் இது. அதிலும், ஸ்வேத பாணலிங்கமாக... ரேகையுடன் கூடிய வெண் சிவப்பு மேனியராக இவர் திகழ்வது விசேஷ அம்சம் என்கிறார்கள்.

சுவாமியின் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீபாலவிநாயகரும் இடப்புறம் ஸ்ரீபாலசுப்ரமணியரும் காட்சி தருகின்றனர். நான்கு திருக்கரங்களுடன் வேலும் மயிலுமாகக் காட்சி தரும் ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு, செவ்வரளிப் பூ சார்த்தி, மனதாரப் பிரார்த்தித்தால், ரத்தச் சோகை உள்பட, உடலில் உள்ள அத்தனை நோய்களும் குணமாகும் என்கிறார்கள் பக்தர்கள்.

சுவாமி சந்நிதிக்கு வலப்புறத்தில் அமைந்திருக்கிறது அம்பாளின் சந்நிதி. நான்கு திருக்கரங்கள்; பவித்திர முடியுடன் கூடிய ஜடாமகுடத்துடன் அழகுத் திருக்கோலம் காட்டுகிறாள் அம்பாள். சிரசு மேற்குப் பக்கமும், இடுப்பு கிழக்குப் பக்கமும், வலது திருப்பாதம் மேற்குப் பக்கமுமாக சற்றே வளைந்து, திரிபங்க சொரூபமாக... அம்பிகையின் தரிசனம் அற்புதம்! இந்த அன்னையின் எதிரில் ஸ்ரீசக்ர மேருவும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

திருவல்லிக்கேணி ஸ்ரீகாமகலா காமேஸ்வரர் ஆலயம்

பிராகாரத்தில் நர்த்தன கணபதியின் தரிசனம்; அர்ச்சனை செய்து, அருகம்புல் சார்த்தி இவரை வணங்கினால், திருமணத் தடை அகலும்; வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல், இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்கையும் சாந்நித்தியம் மிகுந்தவள். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றிவைத்து இந்தத் துர்காதேவியை வழிபட, காரியத் தடைகள் நீங்கும்; தைரியம் பிறக்கும்!

உள்ளம் நிறைந்த பக்தியுடன் இந்த ஆலயத்துக்கு வந்து, அகில நாயகனாம் ஸ்ரீகாமகலா காமேஸ்வரரையும், கருணை நாயகியாம் ஸ்ரீகாமகலா காமேஸ்வரியையும் மெய்யுருக தரிசித்து, மனதார வழிபட்டால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்; இல்லறம் செழிக்கும்; வாழ்வு வரமாகும்.

காஞ்சிபுரம் அருகே ஒரு விட்டலபுரம் பிரேமிக விட்டலன் ஆலயம்; இங்கே ஹரி நாமம் சொன்னால் கவலைகள் தீரும்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தலம் பண்டரிபுரம். அங்கே பெருமாள் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டுள்ளார். விட்டல்லன் என்று போற்றப்படும் அந்தப் பெருமாள் நாடெங்கிலும் அதே திருநாமத்தோடு எழுந்தருள... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலையழகும் புராண சிறப்பும் வாய்ந்த திருத்தலம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வழிபட வேண்டிய முருகன் திருத்தலங்களில் முக்கியமானது தேவிகாபுரம். இங்கே கனகிரீஸ்வரர்கோயில், பாலமுருகன் திருக்கோயில் மற்றும் பெரியநாயகரி அம்மன் திருக்கோயில் என அற்புதமான கோயி... மேலும் பார்க்க

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்: வாழைப்பழ மாலை தரும் உத்தியோக யோகம்!

விநாயகரை வழிபட்டால் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அப்படிப்பட்ட விநாயகப்பெருமானின் கோயில் இல்லாத ஊர் ஏது? ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோலத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் வாரணவாசியில் கல்யாண... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம் புதுக்குடி நதிக்கரை சுப்பிரமண்ய சுவாமி: திருச்செந்தூருக்கு இணையான தலம்!

அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு அருளும் முருகப்பெருமானை நாடி லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் சென்று வழிபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் திருத்தலத்துக்கு இண... மேலும் பார்க்க

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி: சித்தர்கள் மண்ணில் சிலிர்ப்பூட்டும் வனகாளி, பிலாவடிகருப்பர் சந்நிதிகள்

சதுரகிரி... சித்தர்கள் தவம் செய்யும் புண்ணியபூமி. இங்கு வந்தாலோ அந்த மலையை தரிசித்தாலோ சிவம் உங்கள் வாழ்வில் எப்போதும் நிறைந்திருக்கும். காரணம், சிவலிங்கத்தின் 96 வகை வடிவங்களும் இங்கு மட்டும்தான் உண்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டம், செவலூர் ஸ்ரீபூமிநாதர் திருக்கோயில்: சொந்த வீடு யோகம் தரும் செங்கல் பூஜை!

எலிவளை ஆனாலும் தனி வளை என்பது மக்கள் வழக்கும். தனக்கென்று சொந்தமாகக் குடியிருக்க ஓர் இடம் வேண்டும் என்பதைக் குறிக்கும் வாக்கியமே அது. இந்தத் தேசத்தில் பெரும்பாலானவர்களின் கனவு தனக்கென்று ஒரு சொந்த வீட... மேலும் பார்க்க