செய்திகள் :

`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" - அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி

post image

ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் இருவேறு பக்கங்களில் முறுக்கிக் கொண்டு நிற்கின்றன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக கடந்த செப்டம்பர் 22, 23-ம் தேதிகளில் அமெரிக்காவில் இருந்தார் பெசேஷ்கியான்.

ஆரம்பத்தில்... திடீரென...

ஈரான் போருக்குப் பின் ஈரான் தரப்பு அமெரிக்கா சென்றது அதுவே முதல்முறை.

ஈரான் முழுமையான போர் நிறுத்தம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து, ஹார்முஸ் நீர்ச்சந்தி திறப்பது குறித்துப் பேசியது.

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி

ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நன்றாகப் போகிறது... அமெரிக்காவில் நடக்கவிருக்கும் நவம்பர் மாத மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு ஒப்பந்தம் ஏற்படும் என்றெல்லாம் கூறப்பட்டது.

அதன் பின் திடீரென, “ஈரான் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இப்போது அமெரிக்காவில் இருந்த ஈரான் அதிகாரிகளை உடனே வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது என்கிற செய்திகள் வெளியாகின.

பெருமை பேசுகிறது...

இதற்குப் பதிலடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“முன்பே கிளம்பிய ஒருவரைத் தவிர, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஈரானியத் தூதர்களும் திட்டமிட்டபடி தங்களின் பயணங்களை முடித்துக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டனர்.

போலியாகத் தூதரக ‘வெளியேற்றம்’ பற்றிப் பெருமை பேசுவது எந்தவொரு தூதரக அமைப்பின் தலைமைக்கும் பொருத்தமானதல்ல.

இது அவர்களின் விரக்தியையும் தோல்வியையுமே வெளிப்படுத்துகிறது. மேலும், ஐ.நா. அமைப்பை நடத்தும் ஒரு நாடு பின்பற்ற வேண்டிய கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்” என்று பதிவிட்டுள்ளார் அப்பாஸ் அராக்சி.

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி: ஒரு மாத வித்தியாசம்; ஆறு மாதப் போராட்டம் - ஆதார் பிழையால் தவிக்கும் மாணவி!

“ஒரு மாத வித்தியாசம் தான், இதை சரிசெய்ய இவ்வளவு சிரமப்படுவோம்னு நினைக்கவே இல்லை!” என்கிறார் அந்த 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவியின் தாய்.கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஒரு மாணவி, 8-ம் வகுப்பு வரை தனியார் பள... மேலும் பார்க்க

`டாஸ்மாக்கை அகற்றல... இனி கிராம சபையே நடக்காது!' – புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு?

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகுரும்பத் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, விபத்துக... மேலும் பார்க்க

"இதனால் தான் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை.!"- சௌமியா அன்புமணி

இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியிருக்கிறார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் நோக்கில் சென்னை வாழ் நெல்லை மக்கள் ஏற்பாட்டின் பேரில், நெல்லைக்கு நேர... மேலும் பார்க்க

Flydubai சம்பவம்: "இந்தப் பயங்கரவாத தாக்குதல் 'இந்த' இரண்டின் மீதான தாக்குதலாகும்!" - இஸ்ரேல்

கடந்த 30-ம் தேதி, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குச் சென்ற ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றைத் தகர்க்கப் பார்த்த சம்பவம் ஒன்று நடந்தது.இந்த விபரீதத்தைத் தடுக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந... மேலும் பார்க்க