செய்திகள் :

'பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கும் விருந்து!' - அமைச்சர் ஆதவ் அப்டேட்

post image

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்திருந்தது.

அதில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, 'ஆசியப் போட்டியில் பதக்கங்கள் பெற்றவர்கள் தான் நமக்கு முன்னுதாரணம்.

விளையாட்டுத் துறையில் நிறைய திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம்.

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

விளையாட்டு வீரர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராகி வருகின்றது.

ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சருடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதில் விடுதியில் உள்ள மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய உள்ளோம்.

தமிழ்நாட்டில் குறைந்தது 4 வருடத்திற்குள் அனைத்து sports city களும் உருவாகிவிடும்.

8 வயது முதல் விளையாடி, ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வரை தமிழ்நாடு அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைகளைப் போன்று, அதே தொகையை பயிற்சியாளர்களுக்கும் வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்; முதலமைச்சர் நிச்சயம் அதை ஏற்பார்.

நம் திறமைகளை அறிந்து,அதை வளர்த்து, போட்டிகளில் பங்கேற்று, வெற்றிகளைப் பெற வேண்டும்.

அமைச்சர் ஆதவ்
அமைச்சர் ஆதவ்

மாணவர்கள் யூடியூப்- இல் படங்கள் பார்ப்பதை விட, விளையாட்டை மேம்படுத்த தேவையான விஷயங்களை பார்த்து, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா மற்றும் நம் மாநிலமே ஆசியப் போட்டிகளில் வெற்றவர்களை கண்டு பெருமை கொள்ளும் தருணம் இது' என்றார்.

`டாஸ்மாக்கை அகற்றல... இனி கிராம சபையே நடக்காது!' – புறக்கணித்த பெரியகுரும்பத் தெரு மக்கள்; தீர்வு?

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகுரும்பத் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு, விபத்துக... மேலும் பார்க்க

"இதனால் தான் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை.!"- சௌமியா அன்புமணி

இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியிருக்கிறார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் நோக்கில் சென்னை வாழ் நெல்லை மக்கள் ஏற்பாட்டின் பேரில், நெல்லைக்கு நேர... மேலும் பார்க்க

Flydubai சம்பவம்: "இந்தப் பயங்கரவாத தாக்குதல் 'இந்த' இரண்டின் மீதான தாக்குதலாகும்!" - இஸ்ரேல்

கடந்த 30-ம் தேதி, துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குச் சென்ற ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றைத் தகர்க்கப் பார்த்த சம்பவம் ஒன்று நடந்தது.இந்த விபரீதத்தைத் தடுக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந... மேலும் பார்க்க

`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" - அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி

ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் இருவேறு பக்கங்களில் முறுக்கிக் கொண்டு நிற்கின்றன.அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை... மேலும் பார்க்க

"தன் பக்க நியாயத்தை சொல்லவிடாமல் வாக்காளர் பெயரை நீக்குவது சட்ட விரோதமானது" -உச்ச நீதிமன்ற நீதிபதி

இந்தியாவில் தற்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் தீவிரப் பேச்சுப் பொருளாக ஆகி வருகிறது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, ‘எங்களி... மேலும் பார்க்க