செய்திகள் :

``ஆம், ஆட்சி மாற்றம்தான் எங்கள் விருப்பம்" - பிரசாந்த் பூஷண் அதிரடி

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது.

தேர்தல் முறைகேடுகள், எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்டவைகளை முன்வைத்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், CJP அமைப்பும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா, CJP அமைப்பின் அபிரீத் தீப்கே ஆகியோருடன், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களைச் சந்திதனர்.

பிரசாந்த் பூஷண்

அப்போது பேசிய பிரசாந்த் பூஷண், ``ஜனநாயக நாட்டில் ஒரு அரசுக்கு எதிராக அதிருப்தியைப் வெளிப்படுத்துவதும், தவறுகளுக்கு அரசை பொறுப்பேற்கச் சொல்வதும் குற்றமல்ல. எதிர்க்கட்சிகள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. நாங்கள் தற்போது தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யவே போராடி வருகிறோம். ஆனால், இந்த வகையான அடக்குமுறைகளும், கொடூரங்களும் தொடர்ந்தால், நிச்சயமாக இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆமாம், நாங்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தைத்தான் விரும்புகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

பா.ஜ.க முன்னதாகப் பல போராட்டங்களை ஆட்சி மாற்றத்திற்காக நடத்தவில்லையா? ஆனால் இப்போது ஆட்சி மாற்றத்திற்கான சதி நடப்பதாகக் கூறுகிறார்கள். சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் இந்தப் போராட்டம், இப்போது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது" என்று தெரிவித்தார்.


பிரசாந்த் பூஷனின் இந்த அறிவிப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இன்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், `` போராட்டக் குழுக்கள் நாட்டின் இளைஞர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வன்முறை அரசியலில் ஈடுபட வைக்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

பங்களாதேஷில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் 'ஆட்சி மாற்றத்தை' ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் ஒரே நோக்கம் அரசைக் கவிழ்ப்பதுதான் அவர்களின் நோக்கம். ஜனநாயகத்தைக் குழப்பத்திற்கோ, அரசியலமைப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குலைப்பதற்கோ அல்லது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைத் தடுப்பதற்கோ இளைஞர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை ராகுல் காந்தியும் அவரது தோழர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம... மேலும் பார்க்க

பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு நூலகத்தை கோவையில் இன்று (அக்.16) முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மு... மேலும் பார்க்க

'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' - அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

தமிழகத்தில் விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக, அரிசியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரிசி விலை உயர்வு பற்றி பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன... மேலும் பார்க்க

'நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது'- அன்புமணி விமர்சனம்

சென்னையில் 1,000 'ஏசி' மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு, மறு நாளே ரத்து அறிவிப்பை திரும்ப பெற்றது. "தவறுதலாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவற்றை வாபஸ் ப... மேலும் பார்க்க

விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! - கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன்பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்ட... மேலும் பார்க்க

'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒர... மேலும் பார்க்க