செய்திகள் :

ஆயுதபூஜை: 'அரிசி விலை உயர்வால், உயர்ந்த பொரி விலை!' - கரூரில் பொரி வியாபாரம் மும்முரம்

post image

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுதபூஜையின்போது, தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், வீடுகளில் குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த வழிபாட்டின்போது பொரி, அவல், நிலக்கடலை மற்றும் பழ வகைகள் படையலாக வைக்கப்படுகின்றன. இதில் பொரி முக்கிய இடம் பிடிப்பதால், ஆயுதபூஜையை முன்னிட்டு கரூரில் பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வகை அரிசிகளிலும் பொரி தயாரிக்க முடியாது.

இதற்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐ.ஆர்.50, ஐ.ஆர்.64 ரக அரிசிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு, நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து உலர்த்துகின்றனர். பின்னர், உரிய பக்குவத்துக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்ட அரிசியை, விறகுகளைக் கொண்டு சூடாக்கப்படும் பிரத்யேக உலையில் இட்டு பொரியாகத் தயாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 60 பக்கா அளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதன் விலை ரூ.700 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கடந்த ஆண்டு ஒரு பக்கா பொரி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அரிசி விலை உயர்வு காரணமாக ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜையை ஒட்டிய காலகட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 10,000 -க்கும் மேற்பட்ட மூட்டைகள் பொரி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கரூர் மட்டுமன்றி வெள்ளியணை, க.பரமத்தி, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கரூருக்கு நேரில் வந்து பொரியை மொத்தமாகக் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆயுதபூஜைக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருப்பதால், பொரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அரிசி விலை உயர்வு காரணமாக பொரியின் விலையும் உயர்ந்துள்ளதாக கரூரில் மும்முரமாக பொரி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பொரி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மதுரையில் நடைபெற்ற 'CEDOI Awards 2026': 2500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பு!

CEDOI – Consummate Entrepreneurs Development Organisation of India என்ற அமைப்பு, கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் வெறும் 8 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று, தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மண... மேலும் பார்க்க

வேல்ஸ் குழுமம்: முதல்வர் விஜயை பூங்கொடுத்துடன் வரவேற்ற ஐசரி கணேஷ்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்... மேலும் பார்க்க

``தேசிய அளவிலான அங்கீகாரம்; பெருமை கொள்கிறோம்" - தங்கமயில் ஜுவல்லரி

தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருக்கும் நமது தங்கமயில் ஜுவல்லரி. சில சாதனைகள் மட்டுமே ஒரு நிறுவனத்தின் பயணத்தில் சிறப்புமிக்க அத்தியாயங்களாக பெயர் பெறுகின்றன. இன்று தங்கமயில் ஜுவல்லரி அத்தகைய தருணத்... மேலும் பார்க்க

இலையைக் கலையாக்கி வருமானம்... ₹500 முதலீட்டில் வெற்றிபெற்ற காஞ்சிபுரம் இளைஞர்!

அதிகாலை 6 மணி… கையில் ஒரு பை… இயற்கை கொடுக்கும் இலைகளைத் தேடி ஒரு பயணம்! குப்பையாகக் கருதப்படும் இலைகளுக்கு உயிரூட்டி, அவற்றைக் கலைப்படைப்புகளாக மாற்றி வருமானம் ஈட்டுகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

"Starlink-ஐ இந்தியாவுக்குள் வரவிடாமல் பெருமுதலாளிகள் தடுக்கிறார்கள்" - எலான் மஸ்க் குற்றச்சாட்டு

உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்தான் ஸ்டார்லிங்க்.செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் இந்த இண்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கான அனைத்து ம... மேலும் பார்க்க

`பாவம் பார்த்து கைத்தறிப் பொருளை வாங்காதீங்க; எங்க உழைப்பை மதிங்க போதும்!'- ஐடி ஊழியரின் நெசவு பயணம்

பெங்களூருவில் மாதம் எழுபதாயிரம் முதல் லட்சம் வரை சம்பளம்... கையில் நல்ல வேலை... நகர வாழ்க்கை... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் சம்பளம் கூடும் நிலை, வசதிகள் பெருகும் என்ற சொகுசான பாதை அவருக்கு முன்பே... மேலும் பார்க்க