செய்திகள் :

இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" - இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர்

post image

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "ஊழல் லஞ்சம், கலெக்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை தவெக நடத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

 வீரபாண்டியன், பெ.சண்முகம்
வீரபாண்டியன், பெ.சண்முகம்

இந்த ஆட்சி நடைபெறுவதற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது இடதுசாரி கட்சிகள். நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். எங்கள் அமைச்சர்கள் நேர்மையாக இருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் நேர்மையாக இருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தந்த இடதுசாரி கட்சிகள் இப்போது தனித்து நிற்க முடிவு எடுத்தது என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தங்கள் முடிவை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால் அதனை அவர்கள் செய்ய மாட்டார்கள். முடிவு எடுத்த பிறகு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை. அவர்களின் இந்த முடிவை நாம் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்" என்று பேசியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

"மதுவிலக்கு துறையில் தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை" - அமைச்சர் விக்னேஷ் உறுதி

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மதன்ராஜா, ... மேலும் பார்க்க

UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 வரை 'நோ' கட்டணம் - மத்திய அரசு விளக்கம்; அதற்கு மேல்?

காசு, பணத்தையெல்லாம் மறந்து, டிஜிட்டல் பேமென்ட்டுக்கு பெரும்பான்மையான இந்தியர்கள் மாறி பல காலமாகிவிட்டது.இந்த நேரத்தில், யுபிஐ பேமென்ட்டுகளுக்குக் கட்டணம் என்கிற பேச்சு எழுந்து, இந்திய மக்களிடம் ஒரு ‘... மேலும் பார்க்க

`விஜய் சேதுபதியின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல தேவையில்லை; பார்வையாளர்களைக் கவர...'- அமைச்சர் சம்பத்

கோவை மாநகராட்சி வ.உ.சி. மைதானம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்... மேலும் பார்க்க

தாராபுரம் இடைத்தேர்தல்: வரிசை கட்டும் பெண் வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாராபுரம் தனி தொகுதியி... மேலும் பார்க்க

BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா?

இந்தியாவின் தலைமையின் கீழ், டெல்லியில் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரி... மேலும் பார்க்க

"சினிமாவில் நடித்தவர் இப்போது மக்கள் முன் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்"- விஜய் குறித்து டிடிவி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.அதற்கு பதிலளித்த... மேலும் பார்க்க