SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கி...
'இதுதான் உண்மையான லவ்' - முன்னாள் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த 'ஸ்பைடர் மேன்' புகழ் டோபி மேகுவேர்
'ஸ்பைடர் மேன்'னாக நடித்துப் பிரபலமான நடிகர் டோபி மேகுவேர், தனது முன்னாள் மனைவியான ஜெனிஃபர் மேயரின் இரண்டாவது திருமணத்தைத் தானே முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

49 வயதான ஜெனிஃபர் மேயர், 34 வயதான நைஜீரியத் தொழிலதிபர் ஜெஃப்ரி ஒகன்லேசியைத் திருமணம் செய்திருக்கிறார். இந்தத் திருமண விழாவை 'ஸ்பைடர் மேன்' நாயகன் டோபி மேகுவேர்தான் நடத்தி வைத்துள்ளார்.
டோபி மேகுவேர் மற்றும் ஜெனிஃபர் மேயர் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டவர்கள். ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, 2016-ல் இவர்கள் பிரிந்தனர்.
தனது முன்னாள் மனைவியின் புதிய வாழ்க்கையை வாழ்த்தி அவரே திருமணத்தையும் நடத்தி வைத்திருப்பது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்தத் திருமண நிகழ்வில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் லியோனார்டோ டிகாப்ரியோ, 'ஃபிரண்ட்ஸ்' தொடர் புகழ் கோர்ட்னி காக்ஸ் போன்ற முன்னணிப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
'விவாகரத்துக்குப் பிறகும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, நல்ல நண்பர்களாகவும் சிறந்த பெற்றோராகவும் இருக்க முடியும்' என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.














