செய்திகள் :

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

post image

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் இருந்து டெல்லி வந்த கரப்பான் பூச்சி அமைப்பு நிறுவனர் அபிஜித் தீப்கேவை, விமானத்தில் வைத்தே டில்லி போலீசார் கைது செய்தனர்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அவரின் செல்போனை பறிமுதல் செய்த பிறகு, தடுப்பு காவலில் வைத்திருந்தனர். பின்னர் அவர் நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த இளைஞர்கள் ஒன்று கூடும் நிலையில் பொதுவாக டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை மத்திய அரசு நீக்கியிருக்கிறது.

இந்நிலையில் கரப்பான் பூச்சி அமைப்பு நிறுவனர் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், " ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடம் இல்லை. கோழையான சர்வாதிகாரிகளால் அது போர்க்களமாக மாறிவிட்டது. இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.

டெல்லியில் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களுக்கான பட்டியலில் இருந்து இன்று ஜந்தர் மந்தரை நீக்கிய மோடி நாளை ஜனநாயகத்தையே ரத்து செய்வார். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக மக்கள் மீண்டும் டெல்லியில் திரண்டு நிற்கிறார்கள்.

Delhi Protest
Delhi Protest

ஜந்தர் மந்தரை அகற்றிவிட்டால் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று மோடி நினைத்தால், அது அவருடைய தவறான கணிப்பு.

ஜந்தர் மந்தர் என்பது வெறும் ஒரு இடம் மட்டுமல்ல; அது யாராலும் என்றுமே அழிக்க முடியாத எதிர்ப்பின் அடையாளம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``தலைமைச் செயலகத்தில் மின்வெட்டுக்கு காரணம் இதுதான்" - மின்வாரியம் விளக்கம்

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு பிரச்னைகள் நீடிக்கின்றன. ஆரம்பத்தில் கிராமங்களில் தொடங்கிய மின்வெட்டு, நகரங்களுக்கும் நீண்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு செய்யும் இடங்கள், ம... மேலும் பார்க்க

டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை' - மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனி போராட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படாது எனமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழுவின்... மேலும் பார்க்க

"இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது"- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், " தவெக அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராம... மேலும் பார்க்க

Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் - இணையப் போரின் பின்னணி!

ஒருபுறம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் அதிபதி முகேஷ் அம்பானி. மறுபுறம் விண்ணில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, பூமியின் எந்த மூலை... மேலும் பார்க்க

``போராட வந்தவர்கள் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி" - சாடும் டிடிவி தினகரன்

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ``பணிநிரந்தரம், மருத்துவ... மேலும் பார்க்க

வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!

வேலூர் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம், தற்போது நவீன வசதிகளுடன் புதிய தோற்றம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வேலூர் மக்களின் பயணத் தேவையை நிறைவேற்றி வரும் இந்த ந... மேலும் பார்க்க