செய்திகள் :

``இனி பெற்றோருடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன்..!" - மைக்ரோசாஃப்ட் துணைத் தலைவர் ஓய்வு அறிவிப்பு

post image

ஐ.டி கம்பெனிகள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விசாவிற்காக புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த பிறகு இந்தியர்களிடம் படிப்படியாக அமெரிக்க மோகம் குறைந்து வருகிறது. அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் துணை தலைவராக வேலை செய்து வரும் கேசவன் சண்முகம் தனது 23 ஆண்டுக்கால வேலையை ராஜினாமா செய்து, தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அவரை மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் வேலையை விட்டு போகும்படி சொல்லவில்லை. அவர்தான் வேலையை ராஜினாமா செய்து இருக்கிறார். அதுவும் தனது பெற்றோருக்காக வேலையை விட்டு இருக்கிறார். எஞ்சி இருக்கும் நாட்களை பெற்றோருடன் செலவிட வேண்டும் என்று கருதி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதி இருப்பதாவது: "மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 23 வருடங்கள் பணியாற்றிய பிறகு, இந்தியாவில் உள்ள எனது வயதான பெற்றோருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இன்று ஓய்வு பெறுகிறேன்.

மைக்ரோசாஃப்ட்டில் உள்ள அற்புதமான சக ஊழியர்களிடமிருந்தும் விலகிச் செல்வது கடினமாக இருந்தது. ஆனால், குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது எனது அன்பை காட்ட இது எனக்கு சரியான தருணம் ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த முடிவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இது குறித்து ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்குவது நம்பமுடியாத சாதனையாகும். ஆனால் உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் விரும்பும் ஒன்றை விட்டு விலகுவது இந்த மாற்றத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலர் விசா தொடர்பான பிரச்னை காரணமாக இந்த முடிவை எடுத்தீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்கு இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட முடிவு என்றும், குடும்பத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் மெட்டா இன்ஜினியரிங் தலைவரான பாலாஜி குருராஜன், 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அமெரிக்காவில் இருந்து பெங்களூருக்கு இடம் பெயர்வதாக அறிவித்தார்.

டெல்லி: "என் நண்பனைக் கைது செய்துள்ளனர்"- மும்பையில் போலீஸ் வேனை மறித்த காக்ரோச் கட்சி பெண் ஆதரவாளர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை டெல்லி போ... மேலும் பார்க்க

இங்கிலாந்து வனவிலங்கு பூங்கா: புலி அடைப்பிடத்தில் நுழைந்தவர் உயிரிழப்பு; பதற வைக்கும் வீடியோ

இங்கிலாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில், புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர், அதன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள Y... மேலும் பார்க்க

"அரசு வேலை வேணாம்"- மும்பையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் உத்தரப்பிரதேச முடிதிருத்தும் தொழிலாளி

இந்தியாவில் அரசு வேலை என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. இதற்காக சிலர் பல ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பையில் முடிதிருத்துபவராக வேலை செய்து செ... மேலும் பார்க்க

தாராபுரம் தொகுதியில் வெற்றி: பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடிய த.வெ.க- வினர்

தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதி வெற்றியை கொண்டாட்டம்... மேலும் பார்க்க

21 மனைவிகள்… பெயர்களே நினைவில் இல்லை! - பங்களாதேஷ் யாசகரின் வித்தியாசமான வாழ்க்கை

ஒரு திருமணத்தையே சமாளிப்பது பெரிய விஷயம் என பலரும் நினைக்கும் நிலையில், பங்களாதேஷைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறியிருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.“அவங்களே வந்து ... மேலும் பார்க்க

'மேடம் பாஸ்வேர்டு அனுப்புங்க' - ஐபோனை திருடிச்சென்ற திருடன் வைத்த நூதன கோரிக்கை

ரயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் மொபைல் போன்கள் திருடப்படுவது வழக்கமாக நடக்கும் ஒன்றாக இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூனில் இது போன... மேலும் பார்க்க