செய்திகள் :

'மேடம் பாஸ்வேர்டு அனுப்புங்க' - ஐபோனை திருடிச்சென்ற திருடன் வைத்த நூதன கோரிக்கை

post image

ரயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் மொபைல் போன்கள் திருடப்படுவது வழக்கமாக நடக்கும் ஒன்றாக இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூனில் இது போன்று நடந்த ஒரு திருட்டு வைரலாகி இருக்கிறது. கௌஷிகி தியானி என்ற பெண்ணின் ஐபோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. ஐபோனை திருடி சென்ற நபர் பின்னர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு போனின் பாஸ்வேர்டு அனுப்பி வைக்கும்படி கேட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செப்டம்பர் 12ம் தேதி கிளமென்ட் டவுனில் இருந்து அவரது ஐபோன் மற்றும் அவரது நண்பரின் சகோதரர் சக்ஷாம் நேகி மற்றும் பலரின் தொலைபேசிகள் திருடப்பட்டன.

அப்பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து மடிக்கணினிகள், மேக்புக்குகள், மொபைல் போன்கள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதிப்புமிக்க பொருட்களும் திருடப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும், சில நேரங்களில், புகார்கள்கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஸ்வேர்டு கேட்டு வந்த மெசெஜ்

தனது ஐபோனை திருடிச்சென்ற நபர் தன்னைத் தொடர்புகொண்டு போன் பாஸ்வேர்டு கொடுக்கும்படி கேட்டார். தனது ஐபோனுக்கான பாஸ்வேர்டு கேட்டு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்தது''அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய போராடிக்கொண்டிருக்கும்போது ​​திருடப்பட்ட தொலைபேசியை வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் பாதிக்கப்பட்ட நபரை நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திருட்டுகள் தனது வீட்டில் மட்டும் நடக்கவில்லை என்றும், ஒரே கட்டிடத்தில் இருந்து 5-6 மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். அவரது வீட்டில் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் நடந்துள்ளது. வேறு சில வீடுகளில் திருடிவிட்டு கடைசியாக அப்பெண்ணின் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 16 திருட்டு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

மும்பை உணவகத்தில் தோசையில் செத்த எலி; ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் கைது; பின்னணி என்ன?

கடந்த மாதம் 24ம் தேதி மும்பை போரிவலியில் உள்ள ராதாகிருஷ்ணா ஹோட்டலுக்கு மான்சி ஆச்சார்யா என்ற பெண் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் சாப்பிட வந்திருந்தார். அவர்கள் மைசூர் மசாலா தோசை ஆர்டர் செய்தனர... மேலும் பார்க்க

flydubai தாக்குதலில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு; சவுதியில் அறுவை சிகிச்சை!

டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் சக விமானியின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் முறியடித்தார். இந்த முறியடிக்கும் முயற்சியில் விமானத்தின் பைலட் அறைக்குள் அவர... மேலும் பார்க்க

`இந்தியாவின் ராக்ஸ்டார்; அவரைக் கண்டால் அஞ்சுகிறார்கள்'- துகாராம் முண்டேயை புகழும் நியூயார்க் டைம்ஸ்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையராக இருப்பவர் துகாராம் முண்டே. இப்பதவிக்கு வந்த நாளில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்... மேலும் பார்க்க

`விவசாயிகளை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்; எதாவது செய்யுங்க.!' - கர்நாடகா முதல்வரிடம் குமுறல்

திருமணத்திற்கு சரியான வரன் அமைவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. குறைந்து வரும் பெண்களின் எண்ணிக்கை, குழந்தை பிறப்பு விகிதம் சரிவு போன்ற பல்வேறு பிரச்னைகள் இதற்கு காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டில... மேலும் பார்க்க

மரண தண்டனை கைதி Christa Pike: `இருமுறை மரண ஊசி... ஆனாலும் உயிரிழக்கவில்லை' - அதிர்ந்த அதிகாரிகள்

அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் மரண தண்டனை கைதி Christa Pike-க்கு மரண ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்ற முயன்றபோது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டு... மேலும் பார்க்க

விவாகரத்து பெற்ற மனைவிக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஒன்று கூடிய ஆண்களின் கோரிக்கைகள் என்னென்ன?

தற்போது பித்ரு பக்‌ஷா எனப்படும் 16 நாள் சடங்குகள் நடந்து வருகிறது. இந்த 16 நாட்களில் இறந்த உறவுகளுக்கு திதி அல்லது திவசம் கொடுக்கப்படுவது வழக்கம். ஒவ்வொருவரும் தங்களது இறந்த உறவுகளுக்காக ஆறுகள், கடல்க... மேலும் பார்க்க