செய்திகள் :

``நான் முதல்வருக்கு அணிவித்த பொன்னாடை குறித்து கொச்சைப்படுத்த வேண்டாம்!" - நயினார் நாகேந்திரன்

post image

இந்தியப் பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டுக்கு வந்ததையொட்டி, பல்வேறு சலசலப்புகள் அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. முதல்வரும், பிரதமரும் பங்கேற்ற விழா மேடையில் எம்.எல்.ஏ வாக கூட இல்லாத நயினார் நாகேந்திரன் இடம்பெற்றது எப்படி என தவெக அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வரை சந்தித்த நயினார் நாகேந்திரன் போர்த்திய பொன்னாடையும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

விழா மேடை
விழா மேடை

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், ``பிரதமர் வரும்போது மாநில முதலமைச்சர் நேரில் சென்று வரவேற்பது மரபு. அந்த ஜனநாயக மரபைத் தான் தற்போதைய முதல்வர் கடைப்பிடித்துள்ளார். அதில் அரசியல் சாயம் பூசக் கூடாது. பிரதமரும் முதலமைச்சரும் கைகளைக் கோத்து நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதே தமிழகத்தின் வளர்ச்சிக்குச் சான்றாகும். மேடையில் என்னை எப்படி அமரவைத்தாரக்ள் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சிறப்பு விருந்தினர்களாக யாரை அழைக்கிறார்களோ, அவர்கள் கலந்துகொள்ளலாம்.
மேலும், இது நாட்டிற்கு அவசியமான பிரச்னையுமல்ல.

இதற்கு முன் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன; அவற்றை நான் விரிவாகக் கூற விரும்பவில்லை. அப்படிப் பேசினால், முதலமைச்சர் சார்ந்தவர்களை நான் தொடர்ந்து ஒருசார்பாக விமர்சிப்பது போல் தோன்றிவிடும். எனவே, அந்த விவாதங்களை இதோடு விட்டுவிடலாம். எனவே, இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதைவிட்டுவிட்டு, மாநிலத்தில் நிலவும் மின்தடைப் புகார்களைச் சரிசெய்யும் பணிகளில் கவனம் செலுத்தலாம். தேவையில்லாத விவாதங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

CTR Nirmal Kumar - TVK
CTR Nirmal Kumar - TVK

முந்தைய ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகிக்கொண்டே போகிறது. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளைக் குறைப்போம் என்று கூறிவிட்டு, வெள்ளை அறிக்கை கூட வெளியிடவில்லை. தடைசெய்யப்பட்ட 11 மதுபான நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியதன் காரணம் என்ன?. அதேபோல, தேர்தல் வாக்குறுதிகளான ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவசச் சிலிண்டர்கள், மாணவர்களுக்கு ரூ.30,000 நிதியுதவி ஆகியவற்றை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. நான் முதலமைச்சரை நேரில் சந்தித்துச் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம்முடைய முதலமைச்சரை நாம் கௌரவிக்க வேண்டும்.

அணிவித்த பொன்னாடை குறித்து யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முதலமைச்சர் என்பவர் நமது மாநிலத்தின் தலைவர். ஒரு கட்சித் தலைவராக நான் அவருக்குரிய மரியாதையைச் செலுத்தியுள்ளேன். சந்திப்பின் போது, தமிழ் மரபுப்படி நலம் விசாரித்துக் கொண்டோம். ஒப்பந்தச் செவிலியர்கள் போராட்ட விவகாரத்தில், முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரவு அளித்த அமைச்சர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் செவிலியர்களைக் கைது செய்து அராஜகம் செய்கின்றனர். தலைமைச் செயலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மின்தடையில் இருண்டுவிடும் நிலை உருவாகியுள்ளது" என்றார்.

வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!

வேலூர் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம், தற்போது நவீன வசதிகளுடன் புதிய தோற்றம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வேலூர் மக்களின் பயணத் தேவையை நிறைவேற்றி வரும் இந்த ந... மேலும் பார்க்க

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.மேலும், ஈரானுடன... மேலும் பார்க்க

உக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' - ரூட்டை மாற்றும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

“ரஷ்ய அதிபர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு டீசல் கிடைக்க உள்ளது.”இது கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அமெரிக்... மேலும் பார்க்க

'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்

"தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என தமிழக காங்கிரஸ் தலை... மேலும் பார்க்க

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை ச... மேலும் பார்க்க

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்... மேலும் பார்க்க