செய்திகள் :

'அரசியலாகும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை!' - அப்டேட் கொடுக்குமா அரசு?

post image

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவான வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், இப்போது அந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியிருக்கிறது.

வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 'அவர் ஒரு ‘சாதாரணமான குடிமகன்’ என்று சொன்னால், அவரது உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால், அவர் மக்கள் பிரதிநிதி; கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எனவே, அவருடைய உடல்நலம் குறித்து அவரது சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும், பொது மக்களுக்கும் அரசு தெரிவித்தாக வேண்டும்.

விஜய் - வி.எஸ்.பாபு

அவர் ஒன்றும் பெரிய வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்தவர் அல்ல. சென்னையிலேயே உயர்தர சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனை உண்டு. எனினும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடரப்படுகிறது. அவருடைய மருத்துவ செலவினங்களை அரசு ஏற்றுக் கொள்கிறதா? குடும்பமா? அல்லது கட்சியா என்பது குறித்தும், அவருடைய தற்போதைய உடல்நலம் குறித்தும் தொடர்ந்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் வைத்திருப்பது மருத்துவமனைக்கும் மாண்பல்ல; அரசுக்கும் அழகல்ல.!' என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், 'அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது திமுக எந்த அளவுக்கு அவர்களின் நல்வாழ்வை விரும்பியதோ, அதேபோல் வி.எஸ். பாபுவும் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

அதிமுக எம்.பி இன்பதுரை வெளியிட்டிருக்கும் பதிவில், 'கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை! பொதுநலன் கருதி, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு' எனக் கூறியிருக்கிறார்.

VS Babu
வி.எஸ்.பாபு - VS Babu

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசத் தொடங்கியிருக்கின்றனர். கட்சி வட்டாரங்களில் நாம் விசாரிக்கையில், 'வயோதிகம் காரணமாக அவருக்கு தொடர்ந்து சிறப்பான தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தரப்பிலிருந்து விரைவில் ஒரு விளக்க அறிக்கை வெளியாகும்' என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

உக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' - ரூட்டை மாற்றும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

“ரஷ்ய அதிபர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு டீசல் கிடைக்க உள்ளது.”இது கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அமெரிக்... மேலும் பார்க்க

'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்

"தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என தமிழக காங்கிரஸ் தலை... மேலும் பார்க்க

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்... மேலும் பார்க்க

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல உள்ளார்.இந்தப் பேரணி குறித்து ராகுல் கா... மேலும் பார்க்க

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..? தமிழ... மேலும் பார்க்க