செய்திகள் :

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

post image

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்கள்..?

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில்,

வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எப்போது... என்ன..?

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும்,

வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

கடன்
கடன்

என்னென்ன கடன்கள்?

இந்தச் சிறப்பு முகாம்களில்...

> நடுத்தர கால விவசாயக் கடன்கள்,

> ஊரகத் தொழில் கடன்கள்,

> வீட்டு வசதிக் கடன்கள்,

> வீட்டு அடமானக் கடன்கள்,

> மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள்,

> திருநங்கையருக்கான கடன்கள்,

> மின் ஆட்டோ கடன்கள் மற்றும்

> இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ், பயன்பெற விரும்பும் தகுதியுடைய மக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு 9884000845 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே...' - திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு அரசியலில் திருமாவிற்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்... மேலும் பார்க்க

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல உள்ளார்.இந்தப் பேரணி குறித்து ராகுல் கா... மேலும் பார்க்க

அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை யை கையில் எடுத்த துகாராம் - போராட்டத்தை கை விட்ட மாணவர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் வெளியான அரசு வேலைக்கான தேர்வு முடிவுகள் வெளியான போது அத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்

நேற்று சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியின் மேடையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அமர்ந்த... மேலும் பார்க்க

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பல்லவி. இவர் பெரும்பாலும் தான் போகும் இடமெல்லாம் தன்னுடைய கைக்குழந்தையை எடுத்துச் செல்வார். இது பல முறை செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.“கைக்குழந்தையைச் செ... மேலும் பார்க்க