செய்திகள் :

டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை' - மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

post image

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனி போராட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படாது என
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. SIR விவகாரம் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) ஆகியவை மத்திய டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமித் ஷா

இது தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில். `` பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர், போராட்ட இடப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராாி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியின் சிபிடி மைதானம் ஆகியவை புதிய போராட்டக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய 3 இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) தனியாக வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜந்தர் மந்தர் பகுதி முக்கிய அரசு அலுவலகங்களுக்கு அருகே அமைந்துள்ளதால், இந்த மாற்றத்தின் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் பயன்பாடு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக்கூடும். டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயளாலர் ஜெய்ராம் ரமேஷ், ``பிரதமர் - உள்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் எந்த அளவுக்குக் கடுமையான பீதி ஆட்கொண்டிருக்கிறது என்பதற்கு, நமது ஜனநாயகத்திற்குத் தினமும் புத்துயிரூட்டி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் இனி போராட்டக் களமாக இருக்காது என்ற அறிவிப்பே தெளிவான சான்றாகும்.
அதிகார போதையில் இருக்கும் இந்த நச்சு இணை, கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை எவ்வளவு கொடூரமாகக் கையாண்டது என்பதை நாம் பார்த்தோம். இவர்களுக்கு இனி ஜனநாயகம் முக்கியமில்லை. நாற்காலி அதிகாரமே இவர்களுக்கு எல்லாம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``தலைமைச் செயலகத்தில் மின்வெட்டுக்கு காரணம் இதுதான்" - மின்வாரியம் விளக்கம்

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு பிரச்னைகள் நீடிக்கின்றன. ஆரம்பத்தில் கிராமங்களில் தொடங்கிய மின்வெட்டு, நகரங்களுக்கும் நீண்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு செய்யும் இடங்கள், ம... மேலும் பார்க்க

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள... மேலும் பார்க்க

"இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது"- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், " தவெக அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராம... மேலும் பார்க்க

Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் - இணையப் போரின் பின்னணி!

ஒருபுறம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் அதிபதி முகேஷ் அம்பானி. மறுபுறம் விண்ணில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, பூமியின் எந்த மூலை... மேலும் பார்க்க

``போராட வந்தவர்கள் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி" - சாடும் டிடிவி தினகரன்

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ``பணிநிரந்தரம், மருத்துவ... மேலும் பார்க்க

வேலூர்: புதுப் பொலிவுடன் பயணிகளை வரவேற்கும் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்!

வேலூர் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம், தற்போது நவீன வசதிகளுடன் புதிய தோற்றம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக வேலூர் மக்களின் பயணத் தேவையை நிறைவேற்றி வரும் இந்த ந... மேலும் பார்க்க