செய்திகள் :

'இது முதல் முறை' - மீண்டும் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்ஷிப் விண்கலம்; எலான் மஸ்க்கின் SpaceX சாதனை!

post image

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், டெக்சாஸில் உள்ள தனது ஏவுதளத்தில் 'ஸ்டார்ஷிப்' விண்கலத்தை இயந்திரக் கைகள் மூலம் சனிக்கிழமை (நவம்பர் 14) வெற்றிகரமாகப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

ஸ்டார்ஷிப் விண்கலம் தன்னுடைய 22 மணி நேரப் பயணத்தில், பூமியை 14 முறை சுற்றி வந்ததுடன், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்காக 26 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.

இந்தப் பணியை முடித்துவிட்டு மீண்டும் பூமி திரும்பியபோதுதான் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது.

மைல்கல்...

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இது ஒரு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது ஏற்படும் அதீத வெப்பத்தைத் தாங்கிப் பிழைத்த இந்த விண்கலம், 'ஸ்டார்பேஸ்' தளத்தின் லான்ச் பேட் 2-க்கு மேலே உள்ள 'சாப்ஸ்டிக்ஸ்' எனப்படும் இரண்டு பிரமாண்ட இயந்திரக் கைகளால் பத்திரமாகப் பிடிக்கப்பட்டது.

முதல் முறை...

விண்ணுக்குச் சென்று திரும்பும் ஸ்டார்ஷிப் விண்கலத்தை இவ்வாறு வெற்றிகரமாகப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

முழுமையாக மறுபயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம், எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களுக்கான செலவைப் பெருமளவு குறைக்க இந்தச் சாதனை உதவும்.

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பின் 15-வது சோதனை ஓட்டம் இதுவாகும்.

இந்தியாவின் சொந்த GPS-க்கு புதிய பலம்: NVS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய ISRO!

விண்ணில் பாய்ந்தது GSLV-F18; துல்லியமான வழிகாட்டி சேவைகளுக்கு புதிய முன்னேற்றம்!இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்தும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன... மேலும் பார்க்க