Apollo : தோல் வழியாக 50 ஃபோன்டன் சிகிச்சைகள்: சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவ...
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்குக் கௌரவம்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் தீர்மானம் என்ன சொல்கிறது?
ஃபிளைதுபாய் விமானத்தில் நடக்கவிருந்த விபரீதம் இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரால் தடுக்கப்பட்டது.
இதையொட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை, கேப்டன் ஸ்மித் மச்சார், ஃபிளைதுபாய் 1073 விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகளைக் கௌரவித்தல், மேலும் அந்த விமானத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியைக் கண்டித்தல் குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை...
> தனது விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்காக இணையற்ற தைரியத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கௌரவிக்கிறது,


> காக்பிட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவிய மாற்று விமானிகள், விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளின் வீரமிக்கச் செயல்களைப் பாராட்டுகிறது,
> கேப்டன் மச்சார் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைந்து முழுமையாகக் குணமடைய வாழ்த்துகிறது,
> ஃபிளைதுபாய் 1073 விமானத்தின் மீதான தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயலாகவும், சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பின் மீதான தாக்குதலாகவும் வன்மையாகக் கண்டிக்கிறது,
> சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் இதுகுறித்து முழுமையான மற்றும் விரைவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், அதன் விவரங்களை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.











