செய்திகள் :

`இன்னும் உயிரோட இருக்கிறாரா?' - 38 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 105 வயது முதியவரை விடுவிக்க உத்தரவு

post image

மேற்கு வங்கத்தில் ஒரு முதியவர் தனது 105 வயதில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1920ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய ஆண்டில் பிறந்த ராசிக் சந்திர மண்டல் கொலை வழக்கு ஒன்றுக்காக 38 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

மால்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த மண்டல் 1988ம் ஆண்டு, அவரது 68-வது வயதில், ஒரு கொலைக்காகக் கைது செய்யப்பட்டார்.1994ம் ஆண்டு அவர் குற்றவாளி எனத் கோர்ட் தீர்ப்பளித்தது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவரது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் 2019ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி உச்ச நீதிமன்றமும் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது.

ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர், வயது தொடர்பான நோய்கள் காரணமாக சிறையிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சீர்திருத்த இல்லத்திற்கு மாற்றப்பட்டார். மண்டல், தனது மகன் மூலம், 2020-ல், தனது நூறு வயதை நெருங்கும் தருவாயில், தனது வயது மற்றும் அது தொடர்பான நோய்களை காரணம் காட்டி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இன்னும் உயிரோடு இருக்கிறாரா?

2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மண்டலின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால ஜாமீனில் அவரை விடுவிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "அவர் உயிருடன் இருக்கிறாரா? ஏன் அவரை நிரந்தரமாக விடுவிக்கக்கூடாது? ஏன் இடைக்கால பரோலில் இருக்க வேண்டும்?" அவரை நிரந்தரமாக சிறையில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

2024ம் ஆண்டு வழங்கப்பட்ட இடைக்கால பரோல் உத்தரவைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்ற அமர்வு, "அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவரை விடுவிக்காததற்கு நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. அவரது ரிட் மனுவை ஏற்று அவர் நிரந்தரமாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்''என்று தெரிவித்தது.

அதிகரிக்கும் மக்கள் தொகை, விரிவடையும் நகரம்: கடல் நீரை குடிநீராக ஏற்க தயாராகும் மும்பை மக்கள்

மும்பையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு மும்பை நகரமும் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே மும்பைக்கு அடுத்து நவிமும்பை என்ற இரண்டாவது மும்பை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டு வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் - திருக்குறளை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி வ... மேலும் பார்க்க

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்கா... மேலும் பார்க்க

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்... Some more jobs gone' - தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்!

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது... மேலும் பார்க்க