செய்திகள் :

இரண்டே வரிகள்தான்... உங்கள் பிள்ளைகளின் ஆயுளைக் காக்கும் சக்தி மிக்க ஆயுள் தேவதை பிரார்த்தனை!

post image

அனைவரும் பூரண ஆயுளோடு சகல நலன்களையும் பெற்று வாழவேண்டும் என்பதே நம் விருப்பம். மனிதன் பூரண ஆயுளுடன் பூமியில் வாழ்ந்து, ஆயிரம் பிறைகள் கண்டு ஆனந்தமடைந்த பிறகு, பேரன்- பேத்திகள் சூழ 60-ம் கல்யாணம், உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் ஆகிய சாந்தி கர்மங்களை செய்துகொண்டு, வாழ்க்கையை நன்கு அனுபவித்து பூர்த்தி செய்தல் வேண்டும்.

ஆயுஷ் தேவதை

இதை நாம் சொல்லவில்லை மிகப் புனிதம் வாய்ந்த லிங்க புராணம்தான் இப்படிச் சொல்கிறது. சரி! பூரண ஆயுள் எனும் மகா பேறு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா? ஆயுள் காலத்தைக் கொடிய நோய்கள் அசைத்துப் பார்க்கும் இந்த காலகட்டத்தில், பூரண ஆயுளுடன் வாழ மார்க்கம் உண்டா? உண்டு!

ஆயுள் வளர்க்கும் ஆயுஷ் ஹோமம்... ஏன், எதற்கு, எப்படி?

ஜனன கால ஜாதகத்தில் கிரகங்களின் ஸ்தான பலன்களுக்கு ஏற்ப ஆயுள் பலம் அறிந்து, உரிய வழிபாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

சரக சம்ஹிதை என்ற பழங்கால ஆயுர்வேத நூல், ‘சரீர ரட்சை’ என்ற பெயரில் சில உபதேசங்களைச் சொல்கிறது. ‘எந்தக் காரியத்தைச் செய்தாலும், செய்ய மறந்தாலும் உங்கள் சரீரத்தைப் பாதுகாக்க மறக்க வேண்டாம் என்கிறது அந்த நூல். இப்படி சரீரம் காக்கவும், ஆயுளைக் காக்கவும் மிக உவப்பான வழிபாடுதான் ஆயுஷ்ய ஹோமம்.

திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தி

ஆயுஷ் ஹோமத்தை ஏன் செய்ய வேண்டும்?

இந்த ஹோமத்தை ஏன் செய்ய வேண்டும் என்று போதாயனர் விளக்குகிறார். ‘‘திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், ஆயுளை அபிவிருத்தி செய்யவும், தேக ஆரோக்கியத்துக்காகவும், என்னவென்று கார ணம் சொல்ல முடியாமல் ஏற்படும் மனவேதனைகளுக்குத் தீர்வாகவும், மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும், இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு சுகமான வாழ்க்கையை அடைவதற்கும், ஆயுள் தேவதையின் அருளாசி பெற்றுப் பூரண ஆயுளுடன் உடல் மற்றும் மனநலம் குன்றாமல் வாழ்வதற்கும் ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்’’ என்கிறார் அவர்.

இந்த ஹோமத்தை எப்போது செய்ய வேண்டும்?

வசதியிருந்து ஒவ்வொரு மாதமும் சரியாக ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஹோமத்தைச் செய்ய முடிந்தால் விசேஷம். அப்படி இல்லா விட்டாலும் ஆண்டுக்கு ஒரு தடவை அப்த பூர்த்தியின்போது செய்வது நல்லது. பெரும்பாலானோர் பிணிப்பாதிப்புகளுக்கு ஆட்படும் நிலையில் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுவது உண்டு.

குறிப்பாக... 60-ம் கல்யாணம், உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் போன்ற முக்கிய தருணங்களில் அவசியம் ஆயுஷ்ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு.

குழந்தைகளுக்கு ஆயுஷ் ஹோமம்!

ஒரு குழந்தையின் பெயரில் செய்யப்படும் முதல் ஹோமமாக இதுதான் இருக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு முதல் ஒரு வருட காலம் அதைக் காப்பாற்றும் பொறுப்பை கடவுள் ஏற்றிருக் கிறார். அதனால் அந்த முதல் ஆண்டில் குழந்தைக்காக என்று ஹோமங்கள், யாகங்கள் தேவையில்லை. முதல் வயது முடிந்து அடுத்த வருஷம் ஆரம்பமாவதை ‘அப்த பூர்த்தி’ என்கிறோம். இந்த அப்த பூர்த்தியில்தான் ஆயுஷ்ய ஹோமத்தைச் செய்வார்கள்.

ஆயுஷ் ஹோமத்தின் முக்கிய அம்சங்கள்

மார்க்கண்டேயனைப் பிரார்த்தனை செய்து ஆயுஷ்ய ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும். தீர்க்க ஆயுளை கேட்பதற்காகச் செய்யப்படும் இந்த ஹோமத்தின் மந்திரங்களை போதாயன ரிஷி உருவாக்கினார்.

பார்வதி- பரமேஸ்வரனை இந்த உலகத்துக்கு அம்மா- அப்பா என்பார்கள். அவர்கள் இருவரையும் திருப்தி செய்வதே இந்த ஹோமத்தில் முக்கியமான விஷயம்.

ஆயுஷ்ய ஹோமத்தின்போது ‘ஆயுஷ்ய சூக்தம்’ என்ற மந்திரங்களை பயன்படுத்த வேண்டும். ஓர் உயிரைக் கருவில் உருவாக்கச் செய்வது; அந்தக் கரு நல்ல முறையில் வளர உதவுவது; கருவில் வளர்ந்த குழந்தை உரிய சமயத்தில் பிரசவத்தின் மூலம் இந்த உலகைப் பார்க்கச் செய்வது; அந்தக் குழந்தைக்கு அழகையும் அறிவையும் ஆரோக்கியத்தையும் அளித்து நீண்ட காலம் வாழச் செய்வது... இப்படி எல்லாமே இறைவ னின் கையில்தான் இருக்கின்றன.

இவ்வளவையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, ஆயுளையும் பலமாக்கிக் கொள்ளவே ஆயுஷ்ய ஹோமம் செய்யப் படுகிறது. ஹோமத்தில் செலுத்தப்படும் திரவியங்களும், நமது பிரார்த்தனையும் இறைவனை மகிழ்ச்சி அடைய வைக்கும். அந்த மகிழ்ச்சியில் குழந்தையின் ஆயுளை அவர் விருத்தி செய்கிறார். இப்படி இறைவனைப் புகழ்ந்து நன்றி சொல்பவையாக ஆயுஷ்ய சூக்த மந்திரங்கள் இருக்கின்றன.

ஆயுள் பிரார்த்தனை வழிபாடுகள்

ஆயுள் தேவதை பிரார்த்தனை!

ஆயுஷ்ய ஹோமம் செய்யும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள் ஆயுள் தேவதையை மனதில் தியானித்து, தினமும் கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்வது நல்லது.

ஆயுர்தேஹி தனம்தேஹி வித்யாம்தேஹி மகேஸ்வரி

சமஸ்தம் அகிலான்தேஹி தேவிமே பரமேஸ்வரி

கருத்து: தேவி! எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு. ஆயுள் மட்டும் போதுமா? அதனால், சுகமாக வாழத் தேவையான செல்வத்தையும் கொடு. வெறும் செல்வத்தைக் கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து நான் வீணாகிப் போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்து கொள்ளும் அறிவையும் கொடு. அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடு.

தினசரி இந்தப் பிரார்த்தனையை மனப்பூர்வமாக செய்து வருபவர்கள் நூறு வயது வரை நலமுடன் வாழ சகல தேவ தைகளும் துணைசெய்கிறார்கள்.

வார ராசிபலன் | 12.10.26 முதல் 18.10.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் October 12th to October 18th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, ... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 9 முதல் 15 வரை #VikatanPhotoCards

அசுவினிபரணிகிருத்திகைரோகிணிமிருகசீரிடம்திருவாதிரைபுனர்பூசம்பூசம்ஆயில்யம்மகம்பூரம்உத்திரம்அஸ்தம் மேலும் பார்க்க

பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 5 முதல் 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் மேலும் பார்க்க

வார ராசிபலன் | 5.10.26 முதல் 11.10.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்October 5th to October 11th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, he... மேலும் பார்க்க

ரிஷப ராசியா நீங்கள்? வாழ்வில் ஜெயிக்க... அதிர்ஷ்டம் தேடி வர 15 ஜோதிடக் குறிப்புகள்!

ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஆகவே வசீகர தோற்றம் பெற்றிருப்பீர்கள். உங்களை எவரும் வெல்ல முடியாது. ஆனால், உங்களுக்கு நீங்கள் எதிரியாகலாம். இங்ஙனம் உங்கள் ராசி பற்றி விவரிக்கும் ஜோதிட நூல்கள், உங்கள் வெற்ற... மேலும் பார்க்க