செய்திகள் :

குடியாத்தம்: திருமணம் மீறிய உறவில் திடீர் விரிசல்; காதலன் அடித்துக் கொலை; 4 பெண்களிடம் விசாரணை

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கதிரவன் (வயது 40). திருமணமாகாதவர். அம்பேத்கர் நகருக்கு அருகிலுள்ள அருணாச்சல நகர் பகுதியில் வசிக்கும் 35 வயதான வேறொருவரின் மனைவியுடன் கதிரவனுக்கு திருமணம் மீறிய தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணும் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்ததால், கதிரவன் அவரின் வீட்டுக்கே சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இருவருக்கும் கருத்து - வேறுபாடு நிலவியதால், அப்பெண்ணுடன் பேசுவதையும், பழகுவதையும் துண்டித்துள்ளார் கதிரவன். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண் நேற்று இரவு தனது அக்கா மற்றும் அக்காவின் மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கதிரவனின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கொலைச் செய்யப்பட்ட கதிரவன்

அங்கு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அப்பெண்ணும் அவருடன் வந்திருந்த உறவுக்கார பெண்களும் சேர்ந்து கதிரவனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இதில், மயக்கமடைந்த கதிரவனை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக குடியாத்தம் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 4 பெண்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலனோடு சேர்ந்து கணவனை கொன்று டிரம்மில் வைத்து மூடிய மனைவி - மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆண்டு நடந்த டிரம் படுகொலை நாடு முழுவதும் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. கப்பலில் வேலை செய்த கணவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது அவரை காதலன் துணையோடு கொ... மேலும் பார்க்க

திருமணம் கடந்த உறவிலும் சந்தேகம்; கொன்று புதைக்கப்பட்ட பெண்! - தருமபுரி அதிர்ச்சி

தருமபுரி மாவட்டம் கடத்தூர்... அக்டோபர் 12-ஆம் தேதி காலை... கடத்தூர் 4-வது வார்டு குடியிருப்புவாசிகள் தங்கள் அன்றாட பணிகளுக்காக அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தபோது அத்தெருவில் காலியான இடத்திலிருந்து த... மேலும் பார்க்க

கேரள யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீ வைப்பு; ஒருவர் கைது; பாகிஸ்தான் 'பாஸ்' குறித்து என்.ஐ.ஏ விசாரணை!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான கடவும்பாகம் யூத வழிபாட்டுத் தலத்தின் நுழைவு வாயில் அருகே, கடந்த 12-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் காரில் வந்த நபர் ஒருவர் அ... மேலும் பார்க்க

'கூடத்தில் தறவாட்டில் 7 மர்ம மரணங்கள்' - பல கோடி ரூபாய் சொத்துக்காகக் கொடூரக் கொலை; காரியஸ்தர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியில் கூடத்தில் தறவாடு என அழைக்கப்படும் உமா மந்திரம் வீடு அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பாரம்பர்ய கேரள பாரம்பர்ய நாலுகெட்டு ஓட்டுவீடு இது. வீடு மட்டுமே... மேலும் பார்க்க

உபி: பண்ணை வீட்டில் ஓய்வெடுத்த பாஜக தலைவரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த ரமேஷ் யாதவ் என்பவர் சமீபத்தில் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பதவி கிடைத்தவுடன் ரமேஷ் கட்சி அலுவலகத்திற்கு சென்று புதி... மேலும் பார்க்க

பல்லடம்: 10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் திருட்டு; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள கோடாங்கி பாளையத்தைச் சேர்ந்த கலமாணி என்பவர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி பன்றி வளர்ப்பு கூடத்தில் இருந்து 35 பன்... மேலும் பார்க்க