செய்திகள் :

உபி: பண்ணை வீட்டில் ஓய்வெடுத்த பாஜக தலைவரை கட்டிப்போட்டு ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த ரமேஷ் யாதவ் என்பவர் சமீபத்தில் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். பதவி கிடைத்தவுடன் ரமேஷ் கட்சி அலுவலகத்திற்கு சென்று புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அன்று முழுவதும் பதவி கிடைத்ததை கட்சி அலுவலகத்தில் கொண்டாடினார். இரவில் கொண்டாட்டம் முடிந்த பிறகு நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலையில் உள்ள தனது பண்ணை வீட்டில் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். நள்ளிரவில் முகமூடிக் கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் முழு அளவில் தயார் நிலையில் வந்திருந்தனர். முதலில் ரமேஷ் யாதவை கை, கால்களை கட்டிப்போட்டனர்.

பின்னர் வீட்டை சூறையாடி அங்கு இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும். ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை நடந்த பண்ணை வீடு

மூத்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இணை போலீஸ் கமிஷனர் டாக்டர் விபின் டாடா, போலீஸ் உதவி கமிஷனர் (தெற்கு) தீபேந்திர நாத் சௌத்ரி மற்றும் பெருமளவிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.

முகமூடி அணிந்த குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில், பண்ணை வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். நான்கு பாதுகாவலர்கள், நான்கு துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட சுமார் 14 ஊழியர்கள் விசாரணைக்காகப் பிடித்து செல்லப்பட்டுள்ளனர். கொள்ளையர்களைப் போலீசாரால் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. ரமேஷ் யாதவ் ஒரு சாதாரண உள்ளூர் தலைவர் கிடையாது. அவர் மூன்று முறை கட்சியில் பிளாக் பொறுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

அவரது மனைவி சஷியும் அதே பதவியை வகித்துள்ளார். மேலும், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பித்தூர் தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) சார்பில் அவர் போட்டியிட்டார். அண்மையில் பாஜகவில் இணைந்த அவருக்கு, மாநிலச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்லடம்: 10 லட்சம் மதிப்புள்ள 35 பன்றிகள் திருட்டு; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள கோடாங்கி பாளையத்தைச் சேர்ந்த கலமாணி என்பவர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி பன்றி வளர்ப்பு கூடத்தில் இருந்து 35 பன்... மேலும் பார்க்க

திருப்பூர்: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை, கொலை - பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் நம்பியூர் லாகம்பாளையம் பகுதியில் கணவருடன் வாழ்ந்து வந்தவர் 39 வயதான ஜானகி‌. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் நடராஜ் உயிரிழந்த காரணத்தால், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள சேவ... மேலும் பார்க்க

சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட தகராறு; டிரைவரை அடித்து கொன்ற கிளீனர்; மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூரைச் சேர்ந்தபார்த்திபன் என்ற பாட்ஷா (30). இவர் ராஜாக்கூரில் உள்ள தண்ணீர் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்துவருகிறார்அதே நிறுவனத்தில், ஒத்தக்கடை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்தி 3 உயிர்களைக் காவு வாங்கிய சுஹைல்; சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டதால் சர்ச்சை

கேரள மாநிலம் ​கொச்சி நெடும்பாசேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ‘மினி கூப்பர்’ சொகுசு கார் மோதியதில் வயநாடு கல்பற்றாவைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்ற... மேலும் பார்க்க

குமரி: காதல் தொல்லையால் பெண் எடுத்த விபரீத முடிவு; இளைஞரை அடித்துக்கொன்ற உறவினர்கள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன் (58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரதுமகள் ஏஞ்சல்(26) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஏஞ்சலை, அ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் விசாரணை - அடுத்து யார்?

சிறுமிகளிடம் தவறாக நடந்த குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி ... மேலும் பார்க்க