செய்திகள் :

Jailer 2: "வரலாற்றை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி வருகிறார்!" - அனிருத் ட்வீட்

post image

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகிறது.

'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்து, நாளை திரைக்குக் கொண்டு வருகிறார் இயக்குநர் நெல்சன்.

Jailer 2
Jailer 2

சன் பிக்சர்ஸ், அனிருத் என முதல் பாகத்தின் குழு இதிலும் தொடர, புதிதாகச் சிலரும் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார்கள்.

படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் திரைப்படம் குறித்து, ரஜினி குறித்து இசையமைப்பாளர் அனிருத் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "தலைமுறைகளைக் கடந்து, மகிழ்ச்சியையும், சிரிப்பையும், சிலிர்ப்பையும், வாழ்நாள் முழுவதுக்குமான நினைவுகளையும் நமக்கு ரஜினி சார் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

76 வயதிலும், கடந்த 51 ஆண்டுகளாகவும், இன்றும் திரையில் மாயாஜாலங்களை உருவாக்கி வரலாற்றை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி வருகிறார்.

நாளை, மீண்டும் ஒருமுறை, அதாவது 172-வது முறையாக, திரையரங்குகள் வெளிச்சத்தால் ஒளிரும்.

உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு, ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் ஒரு மனிதனுக்கான அன்பை இந்த உலகம் மீண்டும் பார்க்கும். ஒரே ஒரு சூரியன். ஒரே ஒரு சந்திரன். ஒரே ஒரு தலைவன்." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

திருநங்கைகள் குறித்து சர்ச்சை பேச்சு: "நாய்கூடத்தான் குட்டி போடுது” - கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை விமர்சித்து தமிழ் சினிமா இ... மேலும் பார்க்க

மெட்ராஸ் : துரோக அரசியல்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 32

`சினி'ஸ்கோப் 32மெட்ராஸ்பொதுவாக சினிமாக்களில் வில்லன்களின் கையில் கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு என எந்த ஆயுதங்கள் இருந்தாலும் அவற்றால் ஹீரோவை எதுவும் செய்ய முடியாது. நமக்கும் அந்தப் பயம் ஏற்படுவதில்லை.... மேலும் பார்க்க

96 Re-release: "இது ஸ்கூல், காலேஜ் முடிச்சிருக்கலாமேனு ஏக்கத்தை உருவாக்குச்சு!" - முருகதாஸ் பேட்டி

எந்த நிலப்பரப்பை மையப்படுத்திய கதை என்றாலும், அதில் குணச்சித்திர நடிகராகத் தன்னுடைய இருப்பைப் பதிவு செய்துவிடுவார் நடிகர் 'ஆடுகளம்' முருகதாஸ். விஜய் சேதுபதியின் '96' படத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டம் எ... மேலும் பார்க்க

சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் விருந்து; ரெடியான வெற்றிமாறன் 'அரசன்' அப்டேட்

சிலம்பரசனின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி இது. இந்த தீபாவளிக்கு சிம்புவின் 'அரசன்' விருந்து ஒன்று காத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் இப்போது 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த ... மேலும் பார்க்க

Jailer 2: 'அதில் பெரிய ஈடுபாடு இல்லை'; 'பாட்ஷா' டு 'பேட்ட' - ரஜினியின் சீக்குவல் திட்டங்கள்!

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வாரம் வெளியாகிறது. 'ஜெயிலர்' முதல் பாகம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வரவேற்பைத் தொடர்... மேலும் பார்க்க

"கலை, வாழ்வியல் பற்றி பேசினோம்; அரசியல் பேசவில்லை"- ரஜினியுடான சந்திப்பு குறித்து வைரமுத்து

ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை நேரில் சந்திருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார். ... மேலும் பார்க்க