மலேரியா, மண்ணீரல் பாதிப்பு: உடல் நலம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள்| மேட்டூர...
'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்
காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும் இடம் என்பதில் இருந்து டெல்லி போலீஸார் நீக்கிவிட்டனர். அதோடு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தருக்கு செல்லும் வழியில் இருந்த இரும்பு கேட்டில் ஏறி குதித்த காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே விமானத்தில் டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருடன் மர்ம நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபிஜித் விமான நிலையம் வழியாகச் செல்லும்போது மக்கள் அவரை பார்த்து கூச்சலிட்டனர். ஒருவர் “சகோதரா ஏன் நாட்டைக் சீரழிக்கிறாய், ஏன் நாட்டைக் கெடுக்கிறாய்?” என்று அபிஜித்திடம் திரும்பத் திரும்பக் கேட்டார். அதோடு கூட்டத்தில் நின்ற சிலர் “திருடன், திருடன்” என்று கூச்சலிட்டனர்.

அதே நேரத்தில் ஒரு அபிஜித் செல்லவேண்டிய காரை சுற்றி ஏராளமானோர் கூடி நின்றனர். அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணமுடியவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக நாளை டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் கூடும்படி தனது ஆதரவாளர்களுக்கு அபிஜித் திப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தேசபக்தர்கள் மற்றும் தேசியக் கொடியை விரும்பும் மக்கள் அக்டோபர் 16 அன்று மாலை 5 மணிக்கு பூங்காவில் ஒன்றுகூடவேண்டும். மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக சௌரப் மற்றும் ஆஷூ ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, மூவர்ணக் கொடியை விரும்பும் அனைவருக்கும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கொனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் கொடியுடன் திரளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றம் இல்லை என்பதை நிரூபிப்போம்," என்று அவர் கூறினார்.

















