செய்திகள் :

'பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அதிமுக கிளைச் செயலாளர் பதவி' - எடப்பாடி பழனிசாமி பதிலடி

post image

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 55- வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, " அ.தி.மு.க- வில் இருந்து 2000 கிளைச் செயலாளர்களும் 1400 ஒன்றிய செயலாளர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

அது கனவிலும் நடக்காது. நிர்வாகிகளின் பல ஆண்டுகால உழைப்பில் உருவான இயக்கம் இது. அ.தி.மு.க- வை குறைத்து எடை போடுவது சரியல்ல. பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அ.தி.மு.க கிளைச் செயலாளர் பதவி. சட்டமன்றத்தில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதில் தொடங்கி தற்போது கிளைச் செயலாளர் வரை தமிழக வெற்றி கழகம் வந்துவிட்டது. சினிமா கவர்ச்சியில் வாக்குகளைப் பெற்று தப்பி தவறி ஆட்சிக்கு வந்துவிட்ட தமிழக வெற்றி கழகத்திற்கு கிளை மற்றும் ஒன்றிய அமைப்புகளில் ஆட்கள் யாரும் இல்லை. அவர்கள் கட்சியில் ஆட்கள் இல்லை என்பதற்காக அடுத்த கட்சிக்காரரை அழைத்து இணைப்பது கேவலமான ஒன்றாகும். தமிழக வெற்றிக் கழகத்தில் யாரும் இல்லை என்பதற்காகவே மற்றவர்களை கூவி கூவி அழைக்கிறார்கள். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் இருவரும் பல கட்சிகளில் இருந்த பின்னரே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்கள் பல ஆண்டுகளாக விஜய் ரசிகராகவோ விஜய் ரசிகர் மன்றத்திலோ இல்லை. அ.தி.மு.க பற்றி பேசினால் அவருடைய கட்சியில் கவனம் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ந்து இதுபோல பேசி வருகின்றனர்" என்றார்.

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' - CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும... மேலும் பார்க்க

"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" - ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்ரைன் பக்கம்தான் நிற்கிறது அமெரிக்கா.அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கொஞ்சம் கருத்து முரண் ஏற்பட்டதுதான். பின்னர், ப... மேலும் பார்க்க

'அவரை அடக்குங்க முதல்ல...' - மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு - தவெக எம்.எல்.ஏ தாமு!

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் ரிப்பன் பில்டிங்கின் அம்மா மாளிகையில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ சேகர் பா... மேலும் பார்க்க

மின் கொள்முதல்: ``கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" - அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட... மேலும் பார்க்க