செய்திகள் :

Jailer 2: 'ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் 'Double Energy!' - லதா ரஜினி நெகிழ்ச்சி

post image

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகமான ‘ஜெயிலர் 2’-வை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

முதல் பாகத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகிடையே படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் 'FDFS'-யை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்த லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

" இது எனக்கு ஸ்பெஷலான எமோஷனல் தருணம். ஒவ்வொரு முறையும் அவரது (ரஜினிகாந்த்) படங்கள் வெளியாகும்போது அவருக்கு கிடைக்கும் அன்பை ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன். நிறைய அன்பும், ஆதரவும் கொடுக்கிறீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

இத்தனை வருடங்களாக அவருடன் இருந்து இந்த அன்பைக் காட்டுவதற்கு நன்றி. ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் 'Double Energy' கொடுக்கும். நெல்சன், அனிரூத், சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள்

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர... மேலும் பார்க்க

ரஜினி கோயில்: '6 வகை அபிஷேகம், 101 தேங்காய்கள்' - ஜெயிலர் 2 வெற்றிக்காக ரஜினிகாந்த் ரசிகர் ஏற்பாடு!

ரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடுரஜினி ரசிகர் வழிபாடு... மேலும் பார்க்க

Jailer 2: 'ONE SUN… ONE MOON… ஒரே சூப்பர் ஸ்டார்...' - மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஜெயிலர் 2’ திரைப்படம் பேனர்கள் ஜெயிலர் 2’ திரைப்படம் பேனர்கள் ஜெயிலர் 2’ திரைப்படம் பேனர்கள் ஜெயிலர் 2’ திரைப்படம் பேனர்கள் ஜெயிலர் 2’ திரைப்படம் பேனர்கள் ஜெயிலர் 2’ திரைப்படம் பேனர்கள் ஜெயிலர் 2’ திர... மேலும் பார்க்க

Jailer 2: "அதை தவிர்த்துவிட்டு ஃபுல் மீல்ஸ் வாய்ப்புக்காக காத்திருந்தேன்!" - எஸ்.ஜே. சூர்யா

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் நாளை 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த குழுவினர் இதிலும் தொடர, சில புதிய கதாபாத்திரங்களையும் இதில் இணைத்திருக்கிறார் இயக்குநர் ந... மேலும் பார்க்க

Jailer 2: "வரலாற்றை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி வருகிறார்!" - அனிருத் ட்வீட்

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகிறது. 'ஜெயிலர்' முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்து, நாளை திரைக்க... மேலும் பார்க்க

திருநங்கைகள் குறித்து சர்ச்சை பேச்சு: "நாய்கூடத்தான் குட்டி போடுது” - கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை விமர்சித்து தமிழ் சினிமா இ... மேலும் பார்க்க