ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' - Waiting Charge, இரவு கட்டணம் எவ்வள...
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் Tie? நெதன்யாகுவின் பெரும்பான்மைக்குச் சிக்கல்? வெளியான கருத்து கணிப்புகள்
இஸ்ரேலில் நேற்று (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
2023-ம் ஆண்டு அக்டோபர் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகும், ஈரான் போருக்குப் பிறகும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திக்கும் முதல் தேர்தல் இது.
நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் களம் காண்கிறார்.
Tie-ல் தேர்தல் முடிவுகள்?
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெயர் நெசெட். நெசெட்டில் பெரும்பான்மை பெற குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. தற்போது இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து இஸ்ரேலின் ‘கான் 11’ மற்றும் ‘சேனல் 13’ தேர்தலுக்குப் பின்னான கணிப்பில், நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவருமே தலா 51 இடங்களைப் பெறுவார்கள்... அரபுப் கட்சிகள் கிட்டத்தட்ட 18 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் கணிப்பின்படி பார்த்தால், நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவருமே பெரும்பான்மை பெறமாட்டார்கள்.
ஆனால், இது வெறும் தேர்தல் முடிவுகளின் கணிப்பு மட்டுமே. இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சுமார் 48 மணிநேரம் ஆகும்.
நெதன்யாகு அறிவிப்பு
ஒருவேளை, தேர்தலுக்குப் பின்னான கணிப்புகளின்படி, பிரதான இரு கட்சிகளுமே தலா 51 இடங்களை மட்டுமே பிடித்தால், பெரும்பான்மை பெற அரபுக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியதாக இருக்கும்.
அரபுக் கட்சி என்பது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி ஆகும். இவர்களின் ஆதரவை நெதன்யாகு பெற்றால், ஈரான் போர் தொடங்கி உள்நாட்டு ஆதரவு வரை அனைத்தும் பாதிக்கும்.
இதனால் நெதன்யாகு இப்போதே, ‘அரபுக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது’ என்பதை அறிவித்துவிட்டார்.

ஐசன்காட்டுக்குமே சிக்கல்தான்
ஐசன்காட்டுமே அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் சிக்கல் உண்டு. இவரும் அந்தக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் பிற கட்சிகளின் ஆதரவை இழக்கலாம்... அரசியல் ரீதியாகவும் சவால்களைச் சந்திக்கலாம். ஆனால், இவர் என்ன செய்யப் போகிறார் என்கிற முடிவு இன்னும் தெரியவில்லை.
ஒருவேளை, பெரும்பான்மை பெறுவதில் சிக்கல் நீடித்தால், நெதன்யாகுவே இஸ்ரேலின் இடைக்கால பிரதமராகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
















