செய்திகள் :

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா?; "ஈரான் இரட்டை வேடம் போடுகிறது" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

post image

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்கத் தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.

ஈரான் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்".

- கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு இது.

அப்போது இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகக் கூறினார் அவர்.

மறுக்கும் ஈரான்

ஆனால், அவர் பேச்சை முற்றிலும் மறுத்து நேற்று (ஆகஸ்ட் 3) ஈரான் பேசியுள்ளது.

ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி
ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி

ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி, "தற்போது ஈரான் வாஷிங்டன்னுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் இல்லை.

ஹார்முஸ் நீர்ச்சந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்காக தற்போது ஓமன் உடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் பதிவு

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்...

"ஈரானியத் தலைமையின் இரட்டை வேடத்தை நம்பவே முடியாது.

பித்தலாட்ட பேச்சுகள்...

பேச்சுவார்த்தையை அவர்கள்தான் கேட்கிறார்கள். சிலர் அதை 'கெஞ்சுகிறார்கள்' என்றும் சொல்வார்கள்.

பேச்சுவார்த்தையும் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கான நேரமும் ஒதுக்கப்படுகிறது.

ஆனால் வெளியிலோ, 'நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை, எதைப் பற்றியும் பேசவில்லை. நாங்கள் ஓமன் நாட்டோடு மட்டுமே பேசுகிறோம்' என்று பகிரங்கமாகவும் பெருமையாகவும் பேசுகிறார்கள்.

அத்துடன் நிறுத்தாமல், 'ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் கட்டுப்பாட்டில்தான் இயங்கும்' என்று தங்களின் வழக்கமான பித்தலாட்டமான பேச்சுகளைத் தொடர்கிறார்கள்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

பிரச்னைக்குத் தீர்வு காண்கிறோம்

உண்மையில் அது ஏற்கெனவே அமெரிக்கக் கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிலும், நமது 'உபாயக் முடக்கத்திலும்' அல்லது சிலர் சொல்வது போல் 'அமெரிக்காவின் எஃகுச் சுவரிலும்'தான் உள்ளது.

நாங்கள் நினைத்தால் ஒழிய ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஒரு சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படும் வரையிலோ அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும் வரையிலோ எதுவுமே உள்ளே செல்லப் போவதும் இல்லை.

ஈரான் அதை ஒத்துக்கொள்ள விரும்புகிறதோ இல்லையோ, பல தசாப்தங்களாக அவர்களே உருவாக்கிய ஒரு பிரச்னைக்குத்தான் நாங்கள் இப்போது தீர்வு காணப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

விஷயம் மிகவும் எளிமையானது, ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற முடியாது!"

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கா... மேலும் பார்க்க