செய்திகள் :

"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து

post image

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள்.

மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும் தாண்டி நல்ல நண்பர்கள்.

கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தார். அப்போதும் இவர்களின் நட்பு நன்கு தெரிந்தது.

இன்று மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார். இதை இந்தியாவில் இருக்கும் ரஷ்ய தூதரகம் ஷேர் செய்திருக்கிறது.

புதின் - மோடி
புதின் - மோடி

புதின் தனது வாழ்த்துச் செய்தியில், “உங்கள் நாட்டு மக்களிடையே உங்களுக்கு இருக்கும் மரியாதையும், சர்வதேச அரங்கில் உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கும் முற்றிலும் தகுதியானதே.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்புமிக்க மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் உங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கடந்த வாரம் நான் டெல்லி வந்திருந்த போது, எனக்கும் ரஷ்யக் குழுவிற்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கும் உபசரிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய பேச்சுவார்த்தைகள் வெளிப்படையானதாகவும், மிகுந்த பலனளிப்பதாகவும் அமைந்தன. எப்போதும்போல உங்களுடன் கலந்துரையாடியது எனக்குப் பெருமகிழ்ச்சி.

நமது விவாதங்கள் உங்களுடைய அசாதாரண அரசியல் ஞானத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளன.

நமது நட்பு நாடுகளின் நலனுக்காக, முக்கியமான இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் நமது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நாம் நிச்சயமாகத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்தருமப... மேலும் பார்க்க

`பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர்!'- அமைச்சர் ரமேஷ்

தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அறநிலையத்துறைஅமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தி... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் லண்டன் பயணமும் கேள்விக்குறியான வெளிப்படைத்தன்மையும்!'

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருந்தார். ஒரு வார பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருக்கிறார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 15,000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்... மேலும் பார்க்க

"எங்க அப்பா கோவக்காரர்; நான் திமுகவில் சேர்ந்துவிடுகிறேன் என்று சொன்னவர் துரை வைகோ.!"- கே.என் நேரு

மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று முன்தினம் (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? தனது எம்.பி பதவி அப்படியே ... மேலும் பார்க்க

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" - பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு... மேலும் பார்க்க