செய்திகள் :

உதயநிதியின் சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக நிர்வாகிகள்!| Live Updates

post image

பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி

முன்னாள் சபாநாயகர் அப்பாவு

முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

எதிர்க்கட்சித் தலைவர் மீது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் அவதூறு செய்திகள், டெல்டா விவசாயிகளின் துயரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகச் செய்யப்படும் தெளிவான சூழ்ச்சியாகும். அந்த கேள்விகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, விமர்சகர்கள் ஒரு செயற்கையான சர்ச்சையை உருவாக்கப் பார்க்கிறார்கள்!

அரசியலைப் பற்றி விவாதியுங்கள். கொள்கைகளைப் பற்றி விவாதியுங்கள். உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் போலிச் செய்திகளை முன்வைக்காதீர்கள்!

தவெக அரசு காவிரிப் பிரச்சினையிலிருந்து முற்றிலும் விலகிச் செல்கிறது!

எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சைக் கண்டு எழும் இந்த எதிர்ப்புகள், அவரது வார்த்தைகளைப் பற்றிச் சொல்வதை விட, அவரது விமர்சகர்களைப் பற்றித்தான் அதிகம் வெளிப்படுத்துகின்றன.

அவர் சட்டமன்றத்திற்கு வந்து கடினமான கேள்விகளைக் கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் இந்தச் செயற்கையான வெறுப்பு பிரச்சாரம்!

நேற்று (ஆகஸ்ட் 3) காவிரியில் அணை கட்டுவது சம்பந்தமான தவெக அரசை எதிர்த்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைதுக்கூடச் செய்யப்படலாம் என்கிற பேச்சுகள் எழுந்து வருகின்றன.

இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு திரித்துப் புரிந்துகொள்ளப்பட்டதாக திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இது.

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கா... மேலும் பார்க்க