செய்திகள் :

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

post image

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் சிலருக்கு காயமேற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், மேயர் பிரியா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு சம்பவமாகும். கழக உடன்பிறப்புகள் தங்களது தலைவரைக் காண்பதற்காக நேரில் வந்திருந்தனர். அவ்வாறு சந்திக்க வந்த கழகத் தொண்டர்கள் மீது காவல்துறை கடுமையான தடியடி நடத்தியிருக்கிறது இந்தக் காவல்துறை.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்தத் தாக்குதலில் இருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு மூக்கில் எலும்பு முறிவும், மற்றொருவருக்கு உடல் முழுவதும் ரத்த உறைவும் ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் அளவிற்கு அவர்கள் என்ன தீவிரவாததச் செயலிலா ஈடுபட்டார்கள். அரை மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் எதிராக இப்படி ஒரு கொடூரமான நடவடிக்கையை எடுத்திருப்பது முற்றிலும் அராஜக அரசியலாகும்.

'ஜனநாயகம்' என்று பேசுகிறவர்கள், இன்றைக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். திரையரங்கிற்குச் சென்று 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்து அழுகிறார்கள். ஆனால், நிஜத்தில் ஒரு மனிதனுக்கு ரத்தம் வரும் அளவிற்குத் தாக்குவதுதான் ஜனநாயகமா? காவல்துறை உங்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?

இவற்றுக்கெல்லாம் தற்போதைய அரசாங்கம் கண்டிப்பாகப் பதிலளித்தே ஆக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் வழியே இதற்கு எதிராகத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." என்றார்.

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கா... மேலும் பார்க்க

எப்போது தான் நிற்கும் பெண்கள் குறித்த இந்த அருவருக்கத்தக்க பேச்சுகள்?!

உதயநிதி ஸ்டாலின் - தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதலமைச்சர், நயினார் நாகேந்திரன் - தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர், சி.வி.சண்முகம் - தமிழ்நாட்டின் முன்னாள் சட்டத்து... மேலும் பார்க்க