செய்திகள் :

உதயநிதி சர்ச்சைப் பேச்சு: வீட்டில் போலீஸ் குவிப்பு - பாதுகாப்பா? கைது நடவடிக்கையா?

post image

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தவறிய தவெக என்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக.

அதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சர்ச்சைக்குறிய விதமாக விமர்சிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதியின் இந்தப் பேச்சிற்குத் தவெக, அரசியல் தலைவர்கள் எனப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தவெக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

உதயநிதியின் பேச்சிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே போகின்றன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள உதயநிதியின் வீட்டிற்குப் போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் காவல் உதயநிதி ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளதா அல்லது த. வெ. க நடத்தி வரும் போராட்டங்களின் பாதுகாப்பின் காரணமாக இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை.

உதயநிதி கைதா?

இந்தக் காவல் அதிகரிப்பு உதயநிதி ஸ்டாலின் கைதிற்காகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய் குறித்துச் சர்ச்சையாகப் பேசியதாக தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இப்போது இந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலினும் சேர்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிப்பு... கைது என்கிற பேச்சு வருவது அரசியல் களத்தை இன்னும் சூடாக்குகிறது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க