செய்திகள் :

'உதயநிதி பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்!' - மகளிர் ஆணையத்தில் தவெக புகார்

post image

தஞ்சாவூரில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய உரை சர்ச்சையாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அந்தப் புகாரில், 'காவிரி நீர் பகிர்வு தொடர்பாக உரையாற்றியபோது, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கூட்டத்தில் எழுந்த முழக்கங்களைத் தொடர்ந்து, ஒரு பிரபலமான பெண்ணை குறிவைத்து இரட்டை அர்த்தம் கொண்ட, ஆபாசமான இழிவான கருத்துகளை பேசினார்.

அரசியல் மேடையில் இருந்து பேசப்பட்ட இத்தகைய வார்த்தைகள், பெண்களை வெறும் மதிப்பற்ற பொருளாகக் காணும் மனப்போக்கையும், பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான கொச்சை வசவுகளையும் இயல்பாக்குகின்றன. இது, பொது வாழ்க்கையில் உள்ள பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குவதோடு, மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்பார்க்கப்படும் நாகரிகத்தையும் கடுமையாக சீர்குலைக்கிறது.

எனவே, தேசிய மகளிர் ஆணையம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:

CM Vijay
CM Vijay

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய பேச்சு மற்றும் அதன் காணொளியை அதிகாரப்பூர்வமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களை இழிவுபடுத்தும் மற்றும் ஆபாசமான கருத்துகளை வெளியிட்டதற்காக விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்புவதுடன், நிபந்தனையற்ற பொது மன்னிப்பையும் கோர வேண்டும்.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பொது ஆபாசம் மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கும் தனது சட்டப்பூர்வ பொறுப்பின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த மனுவை உடனடியாக பரிசீலித்து, தக்க நடவடிக்கைகளை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்' என கூறப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கைது: ``விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால்..." - ஸ்டாலின் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கை... மேலும் பார்க்க

"அமைச்சர் வன்னிஅரசு சொல்வது வேறு... நான் எழுப்புகிற கேள்விகள் வேறு!" - விளக்குகிறார் ஆளூர் ஷாநவாஸ்

த.வெ.க அரசின் மூன்று மாதகால ஆட்சி குறித்து பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். இந்தச் சூழலில், நமது சந்தேகங்களை கேள்விகள... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: `விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்' - என்ன நடந்தது?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம், ``நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில், இன்றே வ... மேலும் பார்க்க

உதயநிதி கைது: ``நாங்க என்ன தீவிரவாதிகளா... இப்படி அடிச்சிருக்கீங்க?" - மேயர் பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் சாலை மறியல், அரசுக்கு எதிரான போராட்டம் போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைக் கலைக்கும் வகையில் சில இடங்களில் தடியடி நடத்... மேலும் பார்க்க

உதயநிதி : ``இரட்டை பொருள் தரும் வகையில் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும்" - திருமாவளவன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையில் ஒரு பகுதி சர்ச்சையானது. அது தொடர்பாக ஆளும் தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அவசர வழக்காக வி... மேலும் பார்க்க

மழைக்காலத்தில் கழிவுநீர் சூழும் அபாயம் - மதுரை கோரிப்பாளையத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்!

கோயில் மாநகராமான மதுரையின் மத்தியப் பகுதி, கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியில் "செல்லூர் கண்மாயின்" வடிகால் தூர்வாரும் பணிகள் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடிகால் பணி காரணமாக கா... மேலும் பார்க்க