செய்திகள் :

'உதயநிதி மேட்டரை விட்டுறாதீங்க' - நள்ளிரவு உத்தரவு; களத்தில் அமைச்சர்கள்; முன்ஜாமின் கோரும் உதயநிதி

post image

தஞ்சாவூரில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய விதம் சர்ச்சையாகியிருந்தது.

'இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விடாதீர்கள். எதிர்த்து களமாடுங்கள்' என்று தவெக தலைமையிடமிருந்து நள்ளிரவில் வந்த உத்தரவைத் தொடர்ந்து உதயநிதிக்கு எதிராக தவெகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் ஒட்டுமொத்த முகாமும் களத்தில் குதித்திருக்கிறது.

உதயநிதி
உதயநிதி

இதுதொடர்பாக தவெக-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "மேகதாது விவகாரமாக நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் இரட்டை அர்த்தத்தில் முதல்வரை இழிவுப்படுத்தும் விதமாக உதயநிதி பேசியிருக்கிறார். இது கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனத்தை எட்டும் முன்பாகவே சமூகவலைத்தளங்களில் விமர்சனத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

பத்திரிகையாளர்கள், அரசியல் பேசும் நடுநிலையாளர்கள் பலரும் உதயநிதிக்கு எதிராகக் கருத்து கூறியிருந்தனர். மாலைக்கு மேல் தேசிய ஊடகங்கள் உதயநிதியின் பேச்சைக் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. இதன் பிறகுதான் எங்களின் தலைமையும் உஷாரானது.

செங்கல்பட்டு தொழிற்சாலைக்கு ஆய்வுக்காகச் சென்றுவிட்டு அலுவல் பணிகளை முடித்து வீடு திரும்பிய பிறகு தாமதமாகத்தான் முதல்வர் தரப்புக்கும் உதயநிதியின் பேச்சைப் பற்றி தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

CM Vijay
CM Vijay

பொதுவெளியில் ஒரு பெண்ணின் பெயரை வைத்து இரட்டை அர்த்தத்தில் அவர் பேசியது முதல்வரைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இதன்பிறகுதான் தன்னுடைய சகாக்களை அழைத்து இந்த விவகாரத்தை விட்டுவிடாதீர்கள் சட்டரீதியாகவும் கட்சிரீதியாகவும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் என முதல்வர் தரப்பு உத்தரவிட்டிருக்கிறது.

சகாக்களெல்லாம் ஒன்று கூடி ஆலோசித்து மகளிர் ஆணையத்தில் புகார், மாவட்டங்கள் தோறும் போராட்டம் என முடிவெடுத்திருக்கின்றனர். முதல்வரின் அதிருப்தியையும் வருத்தத்தையும் உணர்ந்து முக்கியமான அமைச்சர்கள் பலரும் நள்ளிரவு 12 மணிக்கு மேலான பிறகும் தலைமையின் உத்தரவின் பேரில் உதயநிதியைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்தனர்.

Vijay
Vijay

இந்த விவகாரத்தை அத்தனை லேசாக முடித்துக் கொள்ள முதல்வர் தரப்பு தயாராக இல்லை. அதனால் போலீஸ் புகார், போராட்டம், சமூக வலைத்தள விமர்சனங்கள் எனப் பல முனைகளிலிருந்து உதயநிதி மீது அட்டாக் தொடரும்" என்றனர்.

காலை 11 மணி முதல் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் தவெகவின் எம்.எல்.ஏக்களும் மா.செக்களும் உதயநிதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவிருக்கின்றனர். உதயநிதியைக் கைது செய்ய அவரது வீட்டைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றம் செல்லவுள்ளார் உதயநிதி.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க