செய்திகள் :

`உன் சகோதரியை கர்ப்பமாக்கினாயா?' குழந்தை பெற்று இறந்த பெண்ணின் சகோதரனிடம் டாக்டர் சர்ச்சை கேள்வி

post image

மத்தியபிரதேசம் ரேவா என்ற இடத்தில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு இருந்த கல்பனா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு தன்னை மருத்துவமனையில் இருந்து அழைத்துச்செல்லும்படியும், இவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று அப்பெண் தனது உறவினர்களிடம் கெஞ்சிய வீடியோ வைரலானது. அதோடு மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்து உறவினர்களிடம் ஓடிய அப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து நிறுத்தி செல்ல விடாமல் தடுத்த வீடியோவும் வெளியாகி இருந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக கல்பனாவும், அவர் பெற்றெடுத்த குழந்தையும் அடுத்த சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது மருத்துவமனையின் சூப்பிரண்டெண்ட் டாக்டர் ராகுல் மிஸ்ரா இறந்து போன கல்பனா மிஸ்ராவின் குடும்பத்தினருடன் உரையாடிய வீடியோ வைரலாகி பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை

கல்பனாவின் சிகிச்சை மற்றும் மரணம் குறித்து மருத்துவமனையில் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோது, ​​``உங்கள் 22 வயது சகோதரியை கர்ப்பமாகிவிட்டீர்கள்" என்று ஒரு குடும்ப உறுப்பினரிடம் டாக்டர் மிஸ்ரா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் டாக்டர் மிஸ்ரா இக்குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இச்சர்ச்சையை தொடர்ந்து சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து டாக்டர் ராகுல் மிஸ்ராவை மத்தியப் பிரதேச அரசு நீக்கியுள்ளது. ஆனால் நீக்கத்திற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

இது குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில்,'' அரசு டாக்டர் மிஸ்ராவை பாதுகாக்கிறது. துணை முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேந்திர சுக்லாவுடன் டாக்டர் மிஸ்ராவுக்கு தொடர்பு இருக்கிறது. எனவேதான் தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் இருப்பதால் டாக்டர் மிஸ்ரா ஏன் தனது பதவியில் தொடர்கிறார் என்று பட்வாரி கேள்வி எழுப்பினார்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க