'துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவ...
``எடப்பாடிக்கான ரிட்டையர்மெண்ட் நேரம் தொடங்கிவிட்டது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல். ஆரம்பத்தில் தாராபுரத்தில் டஃப் கொடுத்த ஆதிமுக 6, 7-வது சுற்றுகளில் மெல்ல பின்தங்கி மூன்றாம் இடத்துக்குச் சென்றது. ஆளும் தவெக அரசு இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `` த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை, மெஜாரிட்டி அரசாக மாற்ற நடத்தப்பட்ட குதிரை பேரத்தின் விளைவு இந்த இடைத்தேர்தல் என்பதை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

இந்த இடைத் தேர்தலில் ஆளும் த.வெ.க. பண பலம், அதிகார பலம், ஆள் பலத்துடன் அனைத்து அமைச்சர்களையும் களம் இறக்கியது. அதோடு, துரோகம் இழைத்தவர்களும், முதுகில் குத்தியவர்களும் நம்மை எதிர்த்து நின்றார்கள். இந்த வெற்றி, அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி." என விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``எந்தக் கட்சியிடமும் எந்தவித குதிரை பேரமோ, பேச்சுவார்த்தைகளோ நடைபெறவில்லை. தவெக நேர்மையான அரசியலையே பின்பற்றுகிறது. அதிமுகவின் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் பேரூர்/கிளைக் நிர்வாகிகள் பலர் ஏற்கனவே தவெக-வில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுக-விலிருந்தும் தளபதியின் ரசிகர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் மிதுன் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகனுக்கான கட்சியாக அதிமுக-வை உருவாக்கி வருகிறார் எடப்பாடி. அதனால் அதிமுக-வின் தொண்டர்கள் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பும் தவெக பக்கம் வந்துவிட்டது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான லட்சியங்களையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் கடமை தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமே உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தூண்டுதலால் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்காமல் பிரசாரத்தைத் தடுக்க முயன்றனர். இந்த தேர்தலில் அப்படியான சூழலை தவிர்க்க, குறுகிய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் போது நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க, 42 கி.மீ தொலைவிற்குப் ரோட் ஷோ நடத்தப்பட்டது. பல இடங்களில் மக்களைச் சந்திக்கும் வகையில் பிரசாரத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மக்களின் ஆதரவுடன் வெற்றி சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
பண பலத்தையோ அல்லது அதிகார பலத்தையோ பயன்படுத்தாமல், முற்றிலும் நேர்மையான முறையில் இந்த இடைத்தேர்தல் வெற்றி பெறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்து ஊழல் செய்து பணம் கொடுக்கும் வாய்ப்பு இருந்தும், ஊழல் பாதைக்குச் செல்லாமல் நேர்மையாக நின்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர் வழக்கம்போலத் தங்களின் தோல்வியை மறைக்கப் பண பலம், அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாகப் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பல தேர்தல்களில் தோற்றுவரும் அவர்கள், அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கும் இதேபோன்ற போலி அறிக்கைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துள்ளனர். எடப்பாடிக்கு 75 வயதாகி விட்டது. அவரின் ரிட்டையர்மெண்டுக்கான நேரம் தொடங்கிவிட்டது. தி.மு.கவை அழிக்க வந்த உதயநிதிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்தத் தேர்தலில் அவர்கள் இரண்டாம் இடத்துக்கு வந்ததற்காக காரணம் எடப்பாடியார் அவரின் வாக்கு வங்கியை திமுக-வுக்கு மடைமாற்றியதுதான். உதயநிதியின் தனிமனித தாக்குதல் தொடரட்டும். அதுதான் எங்களுக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














