செய்திகள் :

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" - அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

post image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,

"திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 590 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 63,157 பள்ளி மாணவர்கள் தினசரிப் பயன் பெற்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த அரசு இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. திருவரங்கத்தில் நடைபெற்றுள்ள ரூ.50 கோடி மதிப்பிலான கோயில் நில அபகரிப்பு மோசடி வழக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நில மோசடிப் பின்னணியில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசரோ அல்லது சார் பதிவாளரோ, யாராக இருந்தாலும் சரி, சட்டம் தன் கடமையைச் செய்யும். தவறு செய்தவர்கள் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமீபத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் எந்தவிதப் பாகுபாடுமின்றி பொது வரிசையில் நின்று மிகவும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியைத் துறையின் அமைச்சர் என்ற முறையில் நானே முன்னின்று நடத்தினேன். அவ்வாறு இருக்கும்போது, நிர்வாகத்தை வழிநடத்தும் நாங்கள் எவ்வாறு பொது வழியில் சென்று தரிசிக்க முடியும்?. இதனைச் சிலர் தேவையின்றி சர்ச்சையாக்க முயல்கின்றனர். அரசியலில் எதற்கெடுத்தாலும் குற்றம் சுமத்தும் தி.மு.க-வினருக்கு ஆப்பிளுக்கும், ஆரஞ்சுக்கும் உள்ள வித்தியாசம் கூடத் தெரிவதில்லை.

ramesh

மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்கு எவ்வித நற்பணிகளையும் செய்யவில்லை. தொகுதி மக்களின் அதிருப்தி மற்றும் அருவருப்பான செயல்பாடுகளின் காரணமாகவே, கொளத்தூர் தொகுதி மக்களே கடந்த தேர்தலில் ஸ்டாலினைத் தோற்கடித்துள்ளனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பாடும் பாட்டையே உதயநிதி ஸ்டாலினும் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் போது உதயநிதி ஸ்டாலின் ஒழுங்காகத் தனது இருக்கையில் அமர்ந்து கவனித்திருந்தால், யார் யார் எந்தெந்தத் துறைக்கு அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவர் கிளாஸை கட் அடித்துவிட்டு சென்றுவிடுகிறார். அப்படி இருக்கும்போது, அவருக்கு எந்த அமைச்சர் எந்தத் துறை என்று எப்படித் தெரியவரும்?" என்று கூறினார்.

வீரமணி வழக்கு: `யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை' - ஸ்டாலின்

வீரமணி போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்" - ராகுல் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``பிரதமர் மோடி மற்றும... மேலும் பார்க்க

``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ - திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க

மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் - தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப... மேலும் பார்க்க

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற... மேலும் பார்க்க