கள்ளக்குறிச்சி விவகாரம்: `எங்களிடம் புகார் வந்தது!' - தமிழ்நாடு மாநில மகளிர் ஆணை...
"என் வாழ்க்கைத் துணைக்கு எந்தப் பழக்கமும் இருக்கக் கூடாது என உறுதியாக இருந்தேன்!" - அஞ்சு குரியன்
நடிகை அஞ்சு குரியனுக்கும், ரோஷன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.

சமீபத்தில் மலையாளத்தின் 'வனிதா' ஊடகத்துக்குப் பேட்டியளித்தவர் தனது கணவர் ரோஷன் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "மேட்ரிமோனி மூலமாகத்தான் எங்கள் இரு வீட்டாரும் பேசத் தொடங்கினார்கள். திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டோம்.
முதலில் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி, அதன் பிறகு இந்த உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கத் தீர்மானித்தோம்.
இருவருமே ஒரு புதிய நபரிடம் பேசுவதால் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமல் இருந்தது. 'மூன்று மாதங்கள் அவரிடம் பேசிப் பார்த்துவிட்டு என் முடிவைச் சொல்கிறேன்' என்று என் வீட்டில் கூறினேன்.
ரோஷனும் தன் வீட்டில் அதையேதான் சொல்லியிருந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு எங்கள் இருவரின் பதிலும் 'சரி' என்பதாக இருந்தது. அதன் பிறகு எங்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சரியாக ஒரு வருடம் கழித்துத் திருமணம் செய்துகொண்டோம்" என்றவர் வாழ்க்கைத் துணை குறித்த தனது எதிர்பார்ப்புகள் பற்றி, "இதைச் சொல்லும்போது பலர் என்னைப் பழைமைவாதி என்று நினைக்கலாம். ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

நானும் அப்படித்தான் வாழ்கிறேன். என் வாழ்க்கைத் துணைக்கு மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற எந்தப் பழக்கமும் இருக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன்.
என் அப்பாகூட என்னிடம், 'இப்படியொரு நபரை நீ எங்கே போய்த் தேடுவாய்?' என்று கேட்பார். ஆனால், துளிகூட மதுப் பழக்கம் இல்லாத ஒருவர்தான் வேண்டும் என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன்.
இறுதியில் நான் எதிர்பார்த்த அத்தனை குணங்களும் கொண்டவராக ரோஷன் கிடைத்தார்" எனப் பேசியிருக்கிறார்.
















