செய்திகள் :

"தவெக கட்சி ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’ "- ஸ்டாலின் விமர்சனம்

post image

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (நவ.22) குடிஅரசு இதழ் முழுத்தொகுப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நம்முடைய ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களுக்குப் பணவீக்கத்தின் பாதிப்பே தெரியாத நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, வெங்காயம் தக்காளிகூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிப்போய்விட்டது.

சாப்பிடாமல் இருந்தால்தான் மயக்கம் வரும் என்று நினைத்தால், இன்றைக்கு அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின்

இதைப் பற்றியெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி முதலமைச்சர் வாயைத் திறந்து எதுவும் பேசுகிறாரா, இல்லை! இது மட்டுமா? கர்நாடக முதலமைச்சர் - தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காமல், “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று சவால் விடுகிறார்.

அதைக் கண்டிக்காத நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? மாநில உரிமைகளை நிலைநாட்ட, நீதியரசர் குரியன் ஜோசப் – அசோக் வரதன் ஷெட்டி IAS - பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்டு நாம் அமைத்த ஒரு குழுவை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கலைத்துவிட்டார். இந்தியா முழுக்க ஊடகங்கள் இதை விமர்சிக்கிறார்கள். அந்தச் செய்தியெல்லாம், இந்த முதலமைச்சருக்குத் தெரிந்திருக்குமா என்று கூட நமக்குத் தெரியவில்லை.

“ஆறே மாசம் – எல்லாமே நாசம்” என்று சொல்கிற மாதிரிதான் த.வெ.க. ஆட்சி நடக்கிறது. த.வெ.க என்ற கட்சி, ‘அரசியல் பிணி’ மட்டுமல்ல; அது ஒரு ‘சமூகப் பிணி’! அதை எதிர்த்து, அரசியல் களத்தில் நாங்கள் போராடுகிற மாதிரி, உங்களைப் போன்ற கருஞ்சட்டைப் படை, பிரசாரக் களத்தில் முன்னின்று, மக்களுக்கு இதனுடைய தீமைகளைப் புரியவைக்க வேண்டும். நம் முன் இருக்கும் கடமையெல்லாம், ஏற்கெனவே தந்தை பெரியார் சொன்னதுதான்... “தமிழா! விழிப்புணர்வு கொள்” என்று தட்டியெழுப்ப வேண்டும்! “தமிழா! இனஉணர்வு கொள்” என்று விழித்தெழ வைக்க வேண்டும்!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்! இதை வரலாற்றுக் கடமையாக நினைத்து நாம் செய்ய வேண்டும். மாபெரும் தலைவர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் போராடி உருவாக்கிய இந்த நவீன தமிழ்நாட்டை யாரும் நாசமாக்கிவிடாமல், நாம்தான் காக்க வேண்டும். அதற்கான அறிவாயுதம்தான், குடிஅரசு இதழ் தொகுப்பு!

அந்த அறிவாயுதத்தை, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கிற நிகழ்வுதான் இந்த நிகழ்ச்சி! பெரியார் ஏந்திய அறிவாயுதத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்! பகுத்தறிவை வளர்ப்போம்! சுயமரியாதையைக் காப்போம்! சமூகநீதியை நிலைநாட்டுவோம்! நவீன தமிழ்நாட்டை இன்னும் உயர்த்துவோம்! அதற்கு இந்த விழாவின் மூலம் உறுதியேற்போம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

போருக்கும் ரெடி, பேச்சுவார்த்தைக்கும் ரெடி: ஈரான் சொல்லும் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 3-ம் தேதி மிட் டேர்ம் தேர்தல் முடிந்து, அந்தத் தேர்தலின் முடிவுகளும் வெளியாகிவிட்டன. ஆனால், இன்னமும் ஈரான் போரில் அடுத்தக்கட்டத்தை முன்னெடுக்கவில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்குத் தேர்தலில் ... மேலும் பார்க்க

`இனி கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெல் கொள்முதல்'- தவெக அரசின் அறிவிப்பால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

உணவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்... மேலும் பார்க்க

`பாமக ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் 70% பிரச்னைகளைத் தீர்ப்போம்!’ - அன்புமணி சொல்வதென்ன?

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி, ``மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. உச்ச நீதிமன்ற... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: 'ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை'- காவல்துறை தரப்பு விளக்கம்!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆட்சிய... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `தீர்ப்பை அமல்படுத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?' - நயினார் கேள்வி!

கரூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தீப... மேலும் பார்க்க

'மீனவர் நலத்துறைக்கு வேற ஆளே இல்லையா?' - அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக கொதிக்கும் மீனவர்கள்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரான ஸ்ரீநாத் தன்னுடைய துறைசார்ந்த மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை கூட கண்டுகொள்வதில்லை. 'மீனவர்களின் நலனில் துளிகூட அக்கறை இல்லாத இவரை ஏன் மீனவர்நலத்துறை அமைச்ச... மேலும் பார்க்க