செய்திகள் :

`ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார்' - நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'

post image

நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா நெல்மை பத்திரிகையளர் மன்றத்தில் இன்று நடைபெறரது. அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால், அமைப்பின் இலட்சனையை வெளியிட்டதோடு, அமைப்பின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமையாக மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா இருந்தார்.

நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'!

ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார் என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். அதனால் அவர் அரசியலில் பயணித்தால், தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகவே நாங்கள் அவரைப் பார்க்கிறோம். அதன் காரணமாகவே, 'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' தொடங்கியுள்ளோம்.

இந்த அமைப்பின் மூலம் மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் அவை அடித்தட்டு மக்களை சென்று சேர்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன அதை களையும் நடவடிக்கையில் எங்கள் அமைப்பு ஈடுபடும்.

நெல்லையில் தொடங்க்பபட்ட 'திரிஷா பேரவை'!

பல்வேறு அமைப்புகள் மருத்துவ முகாம், சட்ட உதவி முகாம், மரம் நடுதல் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவற்றை செய்து வந்தாலும் தங்களது அமைப்பு நேரடியாக களமிறங்கி மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும். சாதாரண மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் சட்ட குழுவை அமைத்துள்ளோம். ஏழை எளிய மக்களின் நோயை தீர்க்கும் வகையில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ உதவி அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அரசு அலுவலகங்களில் மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைக்க உதவிகள் செய்வோம். சமூகப் பணிகளுக்காகவே தொடங்கப்பட்டுள்ள திரிஷா பேரவை சார்பாக தனியாக வலைத்தளம் தொடங்கப்படும். பொதுமக்கள் தங்களின் குறைகளை அந்த வலைத்தளத்தில் தெரியப்படுத்தினால் உரிய உதவிகள் செய்து கொடுக்கப்படும். ஏழை எளிய மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது திரிஷா பேரவையின் தலையாய கடமை" என்று தெரிவித்தார்.

'உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' - கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து அருண்ராஜ்

சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த அவர், " இதுகுறித்... மேலும் பார்க்க

'ஆபத்தை சமாளிக்க...' - ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்! - காரணம் என்அன?

தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் தன்னுடைய முகாம் அலுவலகத்தில் நடத்தவிருக்கிறார்? இந்த திடீர் கூட்டத்தின் பின்னணி என்ன? TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்... மேலும் பார்க்க

Bisleri: "2025-ம் ஆண்டு மாதிரி அது; இன்னொரு சோதனையில் சரியாக தான்.!" - நிறுவனம் சொல்லும் விளக்கம்

பிஸ்லரி தண்ணீர் பாட்டிலில் 'புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்' இருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், பிஸ்லரி தண்ணீர் ... மேலும் பார்க்க

'மாவட்டச் செயலாளரா... வி.எஸ் பாபுவின் மகனா?' - கொளத்தூரில் யாரை நிறுத்தப் போகிறார் விஜய்?

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகி சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இடைத்தேர்தலுக்கு முதல்வர் விஜய் யாரை வேட்பாளராக நிறுத்தப்போகிறார் எனும் பேச்சு பனையூர் முகாமில் எழத் தொடங்கியிருக்கிறது. TVK... மேலும் பார்க்க

"ஏழைகளிடம் பணத்தைக் கொடுத்தால் போதும், வறுமை சரியாகிவிடும் என்று.!" - நிர்மலா சீதாராமன் கட்டுரை

'வறுமைக்கு எதிரான போரில் இந்தியா வென்ற தசாப்தம்' என்கிற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லிங்க்ட் இன் பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.முழுக் கட்டுரை:ஓராண்டுக்கு முன்பு, நாகாலாந்தின் தொ... மேலும் பார்க்க

அமெரிக்க பங்குச்சந்தை சரிவு, ஈரான் தாக்குதல்: ஜனநாயகக் கட்சி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...“நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்கள் குறித... மேலும் பார்க்க