செய்திகள் :

அமெரிக்க பங்குச்சந்தை சரிவு, ஈரான் தாக்குதல்: ஜனநாயகக் கட்சி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

post image

மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

“நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்கள் குறித்து நான் கணித்த இரண்டு விஷயங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும்.

முதலாவதாக, ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரியும் என்று கூறினேன்; அது இப்போது நடந்துள்ளது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இரண்டாவதாக, இதுவரை 81,000 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று கூறினேன்; அதுவும் இப்போது நடந்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு, கடந்த வாரத்தில் ஈரான் அதிக அளவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

கவலைப்பட வேண்டாம், அவை அனைத்தும் இடைமறித்து வீழ்த்தப்பட்டுவிட்டன; எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் இணைந்து...

ஈரானியத் தலைவர்கள் ஜனநாயகக் கட்சியினரைப் பலவீனமானவர்களாகவும், திறமையற்றவர்களாகவும், நாட்டைச் சீரழிப்பவர்களாகவும் கருதுகிறார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடக்க நான் விடமாட்டேன்!

ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் இணைந்து, எண்ணெய் விலையை முடிந்தவரை உயர்த்திப் பிடிக்கக் கடுமையாகப் போராடினார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்குக் குறைந்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்பே இதைப் புரிந்துகொள்ளாமல் போனது வருத்தமளிக்கிறது; ஆனால் இந்த ஒட்டுமொத்தத் தேர்தலுமே மிகவும் ‘விசித்திரமாக’ இருந்தது. இறுதியில், அமெரிக்காவே வெல்லும்!”

ஆட்சி அமைக்க மீண்டும் அழைப்பு விடுத்த காடி ஐசன்கோட்; நெதன்யாகு கட்சியின் நிபந்தனைகள் என்னென்ன?

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ள முன்னாள் ராணுவத் தளபதியும் 'யஷார்' (Yashar) கட்சித் தலைவருமான காடி ஐசன்கோட், இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' (Likud)... மேலும் பார்க்க

”தவெக ஆட்சி நீடிக்காது என தன் ஆசையை ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார்”- பெ.சண்முகம்!

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 23 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரி மீட்புக் குழு சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என... மேலும் பார்க்க

டாக்டராக மாறிய செக்யூரிட்டி; ஓ.பி சீட் வழங்கும் தூய்மை பணியாளர் - கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவலம்

"அரசு மருத்துவமனை என்பது ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் கோயில்" என்பார்கள். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், "இங்கு சிகிச்சைக்குப் போவத... மேலும் பார்க்க

’எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செங்கோட்டையன் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் காலத்தை எதிர்த்து போரிட முடியும். முன்னாள் ஞானத்தை எதிர்த்து போரிட முடியும். ஆனால... மேலும் பார்க்க

”காவிரி நீரை பெறுவதில் தவெக அரசு மெத்தனம்; முதல்வர் விஜய் வாய்திறப்பதில்லை”- எடப்பாடி பழனிசாமி!

தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் எடப்பாடி பானிசாமி செய்தியாளர்களிடம் கூறிய... மேலும் பார்க்க