செய்திகள் :

தஞ்சாவூர்: டூவீலர் மீது லாரி மோதி விபத்து - தாய் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேர் பலியான சோகம்!

post image

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷாஜாலி. இவரது மனைவி பெனாசிர் பேகம் (26). இவர் தனது மகன்கள் முகமது ஜாவீத் (12), முகமது ஜாசித் (10) , முகமது ஹாலித்(5) ஆகியோருடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார்.

விபத்தில் பலியானவர்கள்

கண்டியூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார். அம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக ஹாரன் எழுப்பியபடியே வேகமாக வந்ததுடன், பெனாசிர் பேகம் டூவீலர் மீது லேசாக மோதி விட்டதாக சொல்கிறார்கள். இதில் நிலைத்தடுமாறி டூவீலரை ஓட்டியிருக்கிறார் பெனாசிர் பேகம். அப்போது எதிரே வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி டூவீலர் மீது மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் பெனாசிர் பேகம் அவரது குழந்தைகள் முகமது ஜாசித் , முகமது ஹாலித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த முகமது ஜாவீத் திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலறிந்த நடுக்காவேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் கண்டியூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`என்னை விடுங்க. குழந்தைகளை மட்டும்..' - பாம்பு கடித்தும் கதறிய தாய்; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் தேவதர்ஷினி மற்றும் ஒன்றரை வயதில் தேவஜனனி என இரண்டு குழந்தைகள் இர... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து; நச்சுப் புகையால் மக்கள் அவதி | Photo Album

ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்க... மேலும் பார்க்க

ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்த கார்; 17 பேர் காயம் - சாலை ஓரத்தில் காத்திருந்தவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை... மேலும் பார்க்க

ஓசூர்: சிப்காட்டில் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவன கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

"எழுந்திரிங்க வீட்டுக்குப் போலாம்..!"- விபத்தில் இறந்த கணவர்; உடலுடன் மனைவி நடத்திய பாசப் போராட்டம்!

திருவாரூர், வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73) இவரது மனைவி ஜெயா (65). இவர்களுக்கு கவிதா என்ற மகள் உள்ளார். சங்கர்ராமன், திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நில... மேலும் பார்க்க

ஸ்பெயினில் பயங்கரம்: இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 30 பேர் பரிதாப பலி, பலர் படுகாயம்!

ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலிடோவில் (Toledo) இன்று (அக்டோபர் - 28) காலையில் இரு அதிவேக ரயில்கள் ஒன்றோடொன்று மோதி நேரிட்ட கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந... மேலும் பார்க்க